வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி....யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு
யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக வெளியான தகவல்களை மறுத்து படக்குழு ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எஃப் புகழ் யாஷ் நடித்து பான் இந்திய திரைப்படமாக உருவாகி வருகிறது டாக்ஸிக். நயன்தாரா, கியாரா அத்வானி , ஹூமா குரேஷி , ருக்மினி வசந்த் உள்ளிட்ட நடிகைகள் இப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாக அண்மையில் சமூக வலைதளத்தில் தகவல் வெளியாகி வைரலாகிய நிலையில் தற்போது படக்குழு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது
டாக்ஸிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் அதிரடி-டிராமா திரைப்படமான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, முதலில் அறிவித்தபடியே. 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு தாமதமாகும் என பரவிய வதந்திகளுக்குப் பின்னர், திரைப்பட வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தயாரிப்புக் குழுவிடம் உறுதிப்படுத்திக் கொண்டு, சமூக வலைதளத்தில் தெளிவான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தற்போது ‘டாக்ஸிக்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பெங்களூருவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 2026 ஜனவரியில் படத்தின் முழு அளவிலான புரமோசன் பணிகள் துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான KVN Productions, சமூக வலைதளத்தில் “140 நாட்கள் மட்டுமே மீதமிருக்கிறது…
படம் வெளியாகும் தேதி முக்கியமான பண்டிகை காலமாகும் — குடி பாட்வா(Gudi Padwa), உகாதி (Ugadi) மற்றும் பல பிராந்திய புத்தாண்டு கொண்டாட்டங்களுடன், அதனைத் தொடர்ந்து ஈத் பண்டிகையும் வருவதால், பாக்ஸ் ஆபிஸில் நான்கு நாள் நீண்ட பண்டிகை வாய்ப்பு உருவாகியுள்ளது. KGF-க்குப் பிறகு யாஷ் மீண்டும் திரைக்கு வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை பல மடங்கு ஏற்படுத்தியுள்ளது.
கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகும் இப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது.வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் பண்டிகை சீசனில் தேசிய மற்றும் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கத் தயாராகி வருகிறது.
STOP THE RUMOURS... YASH'S NEXT FILM 'TOXIC' IS *NOT* DELAYED OR POSTPONED – 19 MARCH 2026 RELEASE CONFIRMED… Spoke to the producers – #Toxic is firmly on track for its [Thursday] 19 March 2026 release, perfectly timed for the festive weekend of #Ugadi, #GudiPadwa, and #Eid.… pic.twitter.com/bG1YsvdrQY
— taran adarsh (@taran_adarsh) October 30, 2025





















