RRR Release Date: ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ ரிலீஸ் தேதி தெரியுமா? தியேட்டரில் இந்த அதிரடி, அதிரிபுதிரி..
தியேட்டர்கள் திறக்கப்படாதால் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி வெளியாகிறது.
‘பாகுபலி’ திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் இயக்குநர் ராஜமௌலி. தெலுங்கில் மட்டும் தெரிந்த முகமாய் இருந்த ராஜமௌலி, பாகுபலிக்கு பிறகு அவர் அடுத்த என்ன படம் இயக்குவிருக்கிறார் என்ற ஆவலுடன் இருந்த நிலையில், ‘ஆர்.ஆர்.ஆர்.,’ என்ற பிரமாண்ட திரைப்படத்தை இயக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தப் படத்தில் பிரபல தெலுங்கு முன்னணி நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்தனர். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தொடர்பான அப்டேட்களை அவ்வப்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்தப் படம் தொடர்பான வேலைகளில் ராஜமௌலி மும்முரமாக உள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டு வரும் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம், இந்தாண்டு அக்டோபர் 13ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதிகளைப் பொறுத்தவரை பல அறிவிப்புகள் மற்றும் ஒத்திவைப்புகள் வந்தன. இந்த படம் அக்டோபர் 13 அன்று திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. எந்தவொரு சூழ்நிலையிலும் படத்தை மேலும் ஒத்திவைக்க முடியாது என்று பலர் நினைத்தார்கள். ஆகஸ்டில், உக்ரைனில் படத்தின் கடைசி ஷெட்யூல் முடிந்தது.
இந்த நிலையில், இந்த படம் 2022 உகாதி அன்று பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அக்டோபர் 2021 தசரா மற்றும் ஜனவரி 2022 சங்கராந்தி அன்று ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், 2022 கோடை வெளியீடாக களமிறங்குவதால் ரிலீசுக்கு தயாராக உள்ள பல பெரிய படங்களுக்கு இது நிம்மதியை கொடுத்தன. ஆர்ஆர்ஆர் திரைப்படம் யுகாதி வெளியீட்டால், சங்கராந்திக்கு வெளியாகும் படங்கள் தப்பித்துக்கொண்டன என சினிமா ரசிகர்கள் கூறினார்கள். இதனிடையே, தியேட்டர்கள் திறக்கப்படாதால் புதிய வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், சினிமா ரசிகர்கள் படத்தை காண ஆர்வமுடன் இருக்கின்றனர்.
07.01.2022. It is… :) #RRRMovie #RRROnJan7th @tarak9999 @AlwaysRamCharan @mmkeeravaani @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @RRRMovie @DVVMovies pic.twitter.com/eQDxGEajdy
— rajamouli ss (@ssrajamouli) October 2, 2021
சமீபத்தில், நண்பர்கள் தினத்தை முன்னிட்டு ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு நட்பு பாடல் ஒன்றை வெளியிட்டது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பாடல் வெளியிடப்பட்டது. இதில், தமிழ் மொழிக்கான பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். மரகதமணி இசையில் உருவாகியிருக்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார்.