Watch Video: ட்ரம்ஸ் கலைஞரை மறந்த தொகுப்பாளர்... ஞாபகப்படுத்திய சிவகார்த்திகேயன் - வைரல் வீடியோ
மேடையின் கீழே அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன் சைகை மூலம் மிர்ச்சி விஜய்யிடம், நிகழ்ச்சியில் வாசித்த ட்ரம்ஸ் கலைஞர் குறித்து மைக்கில் பேசுமாறு கூறினார்.
மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தனது கலை பயணத்தை ஆரம்பித்தவர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு விஜய் டிவியில் நடந்த கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் வெற்றியாளரான அவர் அதன் பிறகு அந்த தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார்.
தொடர்ந்து, இயக்குநர் பாண்டிராஜ் மெரினா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகன் வாய்ப்பு கொடுக்க கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார். ஆரம்பத்தில் அவரை ஹீரோவாக ஏற்க மறுத்த ரசிகர்கள் போகப்போக அவரது உழைப்பையும், நடிப்பையும் பாராட்டி ஏற்றுக்கொண்டனர். தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவை மிர்ச்சி விஜய்யும், பாவனாவும் தொகுத்து வழங்கினர். அப்போது மேடையில் நடந்த கலை நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு நன்றி சொல்லிய விஜய் ட்ரம்ஸ் கலைஞர் குறித்து பேச மறந்துவிட்டார்.
Ena manushan ya❤️ @Siva_Kartikeyan Anna 👏 #RRRPreReleaseEvent #Sivakarthikeyan#RoarOfRRRInChennai pic.twitter.com/oI3vcJWv7V
— Rajan (@Subash1899) December 27, 2021
இதனை ராஜமௌலி அருகில் மேடையின் கீழே அமர்ந்திருந்த சிவகார்த்திகேயன் சைகை மூலம் மிர்ச்சி விஜய்யிடம், நிகழ்ச்சியில் வாசித்த ட்ரம்ஸ் கலைஞர் குறித்து மைக்கில் பேசுமாறு கூறினார். இதனையடுத்து மிர்ச்சி விஜய், “ட்ரம்ஸ் கலைஞருக்கும் பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்” என்றார்.
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதுமட்டுமின்றி, மேடை கலைஞராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்ததால் சிவகார்த்திகேயன் சக மேடை கலைஞரை மதிக்கிறார் என அவருக்கு ரசிகர்கள் பாராட்டும் தெரிவித்துவருகின்றனர். மேலும் விழாவில் பேசிய ஜூனியர் என்.டி.ஆரும் சிவகாரத்திகேயனின் பணிவான குணத்தை பாராட்டி பேசியிருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Sivakarthikeyan Speech: ‛இவங்கள வைச்சுக்கிட்டு அத பத்தி பேசலாமா..’ சோப்பு போட்ட தொகுப்பாளரை பங்கம் செய்த சிவகார்த்திகேயன்!