Stars Left Serials | என்ன லிஸ்ட் பெருசா போகுது.. வரிசைகட்டி வெளியேறிய சீரியல் பிரபலங்கள் இவங்கதான்..
அனைத்து வீடுகளிலும் தினமும் தங்களது முகங்களைக்காட்டி பிரபலமாகியிருக்கும் நிலையில் சின்னத்திரை நாயகர்கள் திடீரென விலகினால், புதிய நடிகர்களை ஏற்றுக்கொள்வதற்கு ரசிகர்களுக்கு சில காலங்கள் எடுக்கும்.
மக்களிடம் மிகவும் பிரபலமாக பாரதி கண்ணம்மா சீரியல் ரோசினி முதல் ரக்ஷா, தமன்குமார் என முக்கிய சீரியல்களில் நடித்த பிரபலங்கள் சமீபத்தில் வெளியேறியுள்ளனர்.
சினிமாவிற்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர்கள் சின்னத்திரை நாயகி மற்றும் நாயகர்கள்தான். அனைத்து வீடுகளிலும் தினமும் தங்களது முகங்களைக்காட்டி பிரபலமாகியிருக்கும் நிலையில் சின்னத்திரை நாயகர்கள் திடீரென விலகினால், புதிய நடிகர்களை ஏற்றுக்கொள்வதற்கு ரசிகர்களுக்கு சில காலங்கள் எடுக்கும். அதுப்போன்று சின்னத்திரையில் சமீபத்தில் பல்வேறு சீரியல்களில் இருந்து வெளியான நடிகை மற்றும் நடிகர்களின் லிஸ்ட் இதுதான்.
பாரதி கண்ணம்மா ரோஷ்னி:
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக வலம் வந்தவர் தான் நடிகை ரோஷ்னி ஹரிப்ரியன். பெண்கள்,இளைஞர்கள் என அனைவரின் மனதில் தனக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்திருந்த அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு சில காரணங்களுக்காக சீரியலில் இருந்து திடீரென விலகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததால் இதிலிருந்து விலகியுள்ளார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது நடிகை ரோஷ்னி குக் வித் கோமாளி சீசன் 3-இல் ஒரு குக்காக களம் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வானத்தைப்போல தமன்குமார்:
அண்ணன் தங்கை பாசத்தை கதைக்களமாகக் கொண்டு சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் அண்ணனாக சின்னராசு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் தமன்குமார். சமீபத்தில் இந்த சீரியலில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக இவரது சகோதரியாக நடித்த நடிகை ஸ்வேதா கெக்லா ( துளசி) வெளியேறினார். ஆனால் இதுவரை ஏன் வெளியேறினார்கள் என்ற காரணத்தை நடிகரோ அல்லது தயாரிப்புக் குழுவினரோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பே சிவம் ரக்ஷா
விஜய் டிவியில் ஒளிபரப்பான நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் செந்திலுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் ரக்ஷா. இச்சீரியலின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதனையடுத்து ஜி தமிழில் ஒளிப்பரப்பாகும் அன்பே சிவம் சீரியலில் அன்பு செல்வியாக தன்னுடைய நடிப்பைத் தொடங்கினார். வழக்கம் போல இந்த சீரியலிலும் மக்கள் மனதில் இடம் பெற்றார்.
இந்நிலையில் தான் திடீரென அன்பே சிவம் சீரியலில் இருந்து ரக்ஷா விலகினார். அவருக்குப் பதிலாக தற்போது கவிதா கௌடா நடித்துவருகிறார். ஆனால் இதுவரை ரக்சா வெளியேறியதற்கு காரணம் என்ன என தெரியாமல் ரசிகர்கள் குழம்பி இருந்தனர். இதனையடுத்து ரக்சா தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில், அன்பே சிவம் சீரியலில் இருந்து விலகியது எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்போது வரை அன்பே சிவம் குழு எனக்கு தெரிவிக்கவில்லை. இது தான் அவர்களது வழக்கம் என்பதால் எனக்கு அதிர்ச்சியாக இல்லை என கூறினார். மேலும் என்னுடைய அடுத்த சீரியலில் விரைவில் வருவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
பூவே உனக்காக ராதிகா ப்ரீத்தி:
'பூவே உனக்காக' சீரியலில் பூவரசி கதிரவன் கதாபாத்திரத்தில் ராதிகா ப்ரீத்தி நடித்திருந்தார். இவர் சமீபத்தில், நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறுவதாக அறிவித்தார். ராதிகாவின் இந்த எதிர்பாராத அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கண்ணான கண்னே நித்யா தாஸ்:
கண்ணான கண்ணே சீரியலில், கௌதமின் மனைவியான யமுனா கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் நித்யா தாஸ். இந்த சீரியலில் நடித்ததின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் இருந்தது. 300 அத்தியாயங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த நிலையில்தான் நித்யா தாஸ் சீரியலில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.