Rorschach : ”லூக் ஆண்டனி தயாராகிவிட்டார்!” - மம்முட்டி நடித்த த்ரில்லர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !
சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர்படமான ரோர்சாக் மூலம் லூக் ஆண்டனியாக வெள்ளித்திரையை ஆளத் தயாராகிவிட்டார் மம்முட்டி.

சைக்காலஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர்படமான ரோர்சாக் மூலம் லூக் ஆண்டனியாக வெள்ளித்திரையை ஆளத் தயாராகிவிட்டார் மம்முட்டி. நிஸ்ஸாம் பஷீர் இயக்கத்தில் மம்முட்டி ,ஷரபுதீன், கிரேஸ் ஆண்டனி, கோட்டயம் நசீர் உள்ளிட்டவர்களின் நடிப்பில் , மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகியுள்ள ரோர்சாக் திரைப்படத்தில் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளனர்.
View this post on Instagram
அறிவிப்பின் படி படம் வருகிற அக்டோபர் 7 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நடிகர் மம்முட்டி “#Rorschach யு/ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டது! அக்டோபர் 7, 2022 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்படுகிறது" என தெரிவித்துள்ளார். இது மலையாள சினிமா ரசிகர்களை உற்ச்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
#Rorschach Censored with U/A Certificate ! Releasing Worldwide On October 7 , 2022.@MKampanyOffl @DQsWayfarerFilm @Truthglobalofcl pic.twitter.com/8Zw6Q931z5
— Mammootty (@mammukka) September 30, 2022
ரோர்சாக் திரைப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார், கிரண் தாஸ் எடிட்டிங் பணிகளை செய்திருக்கிறார்.. இசை மிதுன் முகுந்தன் .. அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஓமனக்குட்டன், இப்லிஸ் போன்ற படங்களில் பணியாற்றிய சமீர் அப்துல் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மம்முட்டியின் ஹோம் பேனரான மம்முட்டி கம்பனி மற்றும் , என்.எம் பாதுஷா இணைந்து இந்த படத்தை தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
அகில் அக்கினேனி நடிக்கும் ஏஜென்ட் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மம்முட்டியும் ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்பை த்ரில்லரான இந்த படத்தில் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் தலைவராக அவர் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தவிர போலீஸ் அதிகாரியாக கிறிஸ்டோபர் என்ற த்ரில்லர் படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தனது சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக ரசிகர்களுக்கு மம்முட்டி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மம்முக்கா என ரசிகர்களால் அழைக்கப்படு மம்முட்டியின் நடிப்பில் அடித்தடுத்த படங்கள் வெளியாக இருப்பது அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

