மேலும் அறிய

Kaaduvetty: ரசிகர்கள் போற்றும் காடுவெட்டி படம்.. முதல் நாள் வசூலே இவ்வளவு தானா?

சமூக வலைத்தளங்களிலும் காடுவெட்டி படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.படம் பார்த்த பலரும் அதில் புல்லரிக்க வைத்த காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் ஆர்.கே.சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த த்கவல்கள் வெளியாகியுள்ளது. 

காடுவெட்டி படம்

பாமக கட்சியின் முக்கிய வேராக இருந்தவர்களில் ஒருவர் மறைந்த காடுவெட்டி குரு. இவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “காடுவெட்டி” என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சோலை ஆறுமுகம் இயக்கியுள்ள இப்படத்தில் ஆர்.கே.சுரேஷ் காடுவெட்டி குரு கேரக்டரில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சங்கீர்த்தனா, விஷ்மியா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். மேலும் சுப்பிரமணிய சிவா, ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். 

மஞ்சள் ஸ்க்ரீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு வணக்கம் தமிழா சாதிக் பாடல்களுக்கும், ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசையும் அமைத்துள்ளார். இந்த படம் சென்சார் போர்ட்டில் மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. குறிப்பாக 31 இடங்களில் கட் செய்யப்பட்டு பல இடங்களில் வசனங்கள் மியூட் செய்யப்பட்டது. மேலும் டைட்டில் முதற்கொண்டு சிக்கலில் மாட்ட பின்னர் இயக்குநர் சோலை ஆறுமுகம் விளக்கம் கொடுத்து டைட்டில் காடுவெட்டி வைக்க அனுமதி பெற்றார். 

கொண்டாடி தீர்த்த ரசிகர்கள் 

காடுவெட்டி குரு வன்னிய சமுதாய மக்கள் மட்டுமின்றி வட மாவட்டங்களில் அனைவராலும் மதிக்கத்தக்க நபராகவும் வலம் வந்தார். இதனால் அவரின் வாழ்க்கை வரலாற்று படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்தின் விழாவில், காடுவெட்டி படம் குருவின் வாழ்க்கையை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும் என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்திருந்தார். மேலும் நாடகக்காதல் குறித்தும் இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனால் படம் நேற்று ரிலீசான நிலையில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். 

மேலும் படிக்க: Kaaduvetti Movie Review: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

தொடர்ந்து ட்ரெண்டிங்

சமூக வலைத்தளங்களிலும் காடுவெட்டி படம் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.படம் பார்த்த பலரும் அதில் புல்லரிக்க வைத்த காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால் அந்த படத்துக்கு காட்சிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் காடுவெட்டி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் ரூ.17 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. படம் பாராட்டைப் பெற்றுள்ள நிலையில் இனிமேல் தான் வசூல் எகிறும் என காடுவெட்டி படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
‘வதந்தி 2’ எப்படி இருக்கு? சசிகுமாரின் விசாரணை கதை வென்றதா? – முழு விமர்சனம்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!
‘டிசி’ முதல் நாள் வசூல்: லோகேஷ் கனகராஜ் படத்திற்கு கிடைத்த பாசிட்டிவ் வரவேற்பு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடையா கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்!
6 ல் இருந்து 17 வது இடத்திற்கு சறுக்கிய தமிழகம்.! இதான் உங்க லட்சணம் - விஜய்யை விளாசிய ஆர்.பி.உதயகுமார்
TTV vs Vijay : கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
கடிதம் மட்டுமே எழுதியதை தவிர வேற என்ன செய்திருக்கிறார்.? சிஎம் விஜய்யை கேள்விகளால் வெளுத்தெடுத்த டிடிவி
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Embed widget