மேலும் அறிய

Kaaduvetti Movie Review: ஆர்.கே.சுரேஷின் காடுவெட்டி நடுநாட்டுக்கதை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

Kaaduvetti Movie Review: காடுவெட்டி நடுநாட்டுக்கதை என்ற படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம்.

திரைப்பட தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.கே. சுரேஷ் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் சோலை ஆறுமுகம் இணை தயாரிப்பாளராக இருந்து இயக்கி, மார்ச் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் காடுவெட்டி நடுநாட்டுக்கதை. இந்த படத்தின் விமர்சனம் குறித்து இங்கு காணலாம். இந்த படத்தினை மஞ்சள் ஸ்கீரீன்ஸ் வெளியிட்டுள்ளது. 

படத்தில் நகரத்தில் காதலை மக்கள் எவ்வாறு அணுகுகின்றனர், கிராமத்தில் எவ்வாறு அணுகின்றனர் என்பதை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. நகரத்தில் உள்ள மக்களுக்கு போதுமான கல்வி அறிவும் பொருளாதார மேம்பாடும் இருப்பதால் நகரத்தில் பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொள்கின்றனர் எனக் கூறி நகரத்து காதல் கதையை முடிக்கின்றார். 

ஆனால் கிராமத்து காதல் கதையில் காதலர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், காதலர்களின் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்க முயற்சிக்கின்றார். குறிப்பாக நகரத்து காதல் கதையில் பெற்றோர்கள் மட்டும் கலந்து பேசி தங்களது குழந்தைகளின் காதல் திருமணத்தில் முடிய பக்கபலமாக நிற்கின்றனர். ஆனால் கிராமத்து காதல் கதையில், காதலுக்கும் காதலர்களுக்கும் சம்பந்தமில்லாத ஊர்கார்களால் அந்த காதலும் காதல் செய்யும் பெண்ணின் குடும்பமும் எவ்வாறு சிரமங்களை எதிர்கொள்கின்றது என்பதை காட்ட முயல்கின்றது. 

படத்தின் கதாநாயகனான சுரேஷ் தான் சார்ந்த சமூகத்தில் நடைபெறும் பிரச்னைகளை தீர்க்கும் நபராக வருகின்றார். சுரேஷின் அறிமுக காட்சியே லாஜிக் இடிக்கின்றது. குறிப்பாக காதல் திருமணம் செய்து அவதிப்படும் ஒரு பெண்ணை அழைத்து வருவதற்கான காரணமும், அவர் நடந்துகொள்வதைப் போல் வெளியில் காட்டிக் கொள்ளும் காரணமும் ’சகிக்கல’.  இதுமட்டும் இல்லாமல் அவரது சமூகத்தை சார்ந்தவருக்கு அரசு வேலை வாங்கிக் கொடுத்தார் எனக் கூறி ஒரு காட்சி வருகின்றது.

சாதிச் சங்கத் தலைவராக இருக்கும் ஆர்.கே. சுரேஷால் எப்படி அரசு வேலை வாங்கித் தரமுடியும் என்ற கேள்வி எழாமல் இல்லை. படத்தில் நாடகக் காதல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் நாடகக் காதல் என சொல்லப்படுகின்ற ”புளித்த மாவை”  மீண்டும் ஒருமுறை அரைத்துள்ளது காடுவெட்டி படக்குழு. சென்சார் போர்ட் பல இடங்களில் வசனங்களை மீயூட் செய்தும் சில இடங்களில் வசனங்களை கட் செய்தும் உள்ளது. இது படக்குழுவுக்கு ஒருவகையில் உதவிதான். படத்தின் பல வசனங்கள், “ யெப்பா முடியல” மோட் தான். 

படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் என்றால் அதில் இசைக்கு முதல் இடம் கொடுக்கலாம். பின்னணி இசையை பாராட்டலாம். அறிமுக இசையமைப்பாளர் சாதிக் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இணைந்து, அறிமுக படத்திலேயே பெயர் பெற்றுத்தரும் அளவிற்கு இரண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார். கிராமப்புற வாழ்வியலில் உள்ள சில பழக்க வழக்கங்களை காட்சிப்படுத்தியுள்ளதை பாராட்டலாம்.  புகழேந்தியின் ஒளிப்பதிவு படத்தில் இருக்கும் ப்ளஸ் பாய்ண்டுகளில் ஒன்று.   படத்தில் அரசியல் குறியீடுகள் சமகால அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றது. இது சமகால அரசியல் குறித்த இயக்குநரின் பார்வையை எடுத்துரைக்கின்றது. படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸ் மற்றும் க்ளைமேக்ஸ் காட்சிகள், “இதைத்தான் நைட்டெல்லாம் உக்காந்து ஒட்டீட்டு இருந்தியா” என்ற டெம்ப்ளேட்டை நியாபகப்படுத்தாமல் இல்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?MK Stalin slams Intelligence IG: ''கோட்டை விட்ட உளவுத்துறை! கடுப்பான முதல்வர் ஸ்டாலின்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin:
CM MK Stalin: "அதானியைச் சந்தித்தேனா?" சட்டசபையில் போட்டு உடைத்த மு.க.ஸ்டாலின்!
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
CUET UG PG: அடடே.. க்யூட் இளநிலை, முதுநிலைத் தேர்வில் முக்கிய மாற்றம்: யுஜிசி தலைவர் அறிவிப்பு
சபரிமலையில் பக்தர்களின்  பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
சபரிமலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவசம் போர்டு எடுத்த நடவடிக்கை
Viruchigam  New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
Viruchigam New Year Rasi Palan: தொட்டதெல்லாம் வெற்றி! 2025ல் கம்பேக் தரப்போகும் விருச்சிகம்!
மின்சார வாரியத்தில் ஊழல்களும், முறைகேடும்; செந்தில்பாலாஜிக்கு தலைவலியை தரும் அன்புமணி
மின்சார வாரியத்தில் ஊழல்களும், முறைகேடும்; செந்தில்பாலாஜிக்கு தலைவலியை தரும் அன்புமணி
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Chennai Safety: என்கவுன்டர்னா பயந்துருவோமா? அடங்காத ரவுடிகள் - தொடரும் கொலைகள், சென்னை பாதுகாப்பானதா?
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
Breaking News LIVE: பிரசவத்தில் உயிரிழந்த குழந்தை; கவலைக்கிடத்தில் தாய் - எழும்பூர் மருத்துவமனையில் பரபரப்பு
"குறையே சொல்ல மாட்டேன்" EPS கொண்டு வந்த திட்டத்தை புகழ்ந்து தள்ளிய துரைமுருகன் - எந்த திட்டம்?
Embed widget