Rajinikanth: 90ஸ் கிட்ஸின் விருப்பமான ரஜினிகாந்த் காஸ்ட்யூம்.. மனிதன் படத்தை நினைவுகூர்ந்த அருணா குகன்!
மனிதன் படம் தொடங்கியதும் ஒலிக்கும் இந்தப் பாடலுடன் பெயர்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் நீண்ட கெள பாய் அங்கிகள் அணிந்து இந்தப் பாடலுக்கு உதடசைத்திருப்பார்.
ரஜினி படங்களில் டைட்டில்
80 மற்றும் 90களில் வெளிவந்த படங்களின் டைட்டில் கார்டுகள் அன்றைய தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு இன்றும் உற்சாகத்தை அளிக்கக் கூடியவை. பின்னணி ரெட்ரோ எஃபக்ட்டில் பளிச்சிடும் வண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, படத்தில் நடித்த வேலை செய்தவர்களின் பெயர்கள் முன்னணியில் ஓடிக்கொண்டிருக்கும். அதிலும் குறிப்பாக எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினி நடித்த படங்களுக்கு ஒரு தனி சாயல் உண்டு. அப்படியான ஒன்றுதான் மனிதன் படத்தின் டைட்டில் பாடல்.
மனிதன்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த மனிதன் திரைப்படம் 1987ஆம் ஆண்டு வெளியானது. ரூபிணி, ஸ்ரீ வித்யா, ரகுவரன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்திரபோஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வைரமுத்துவால் எழுதப்பட்டன. ஏவிஎம் நிறுவனம் படத்தைத் தயாரித்திருந்தது.
இந்நிலையி இந்தப் படத்தின் டைட்டில் பாடல், ரஜினியின் கூல் காஸ்டியூம், அதன் பின் இருக்கும் சுவாரஸ்யமான கதை உள்ளிட்டவற்றை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏவி எம் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன்.
குளியலறையில் ரஜினி காதில் ஒலித்த பாடல்
ஏ.வி. எம் நிறுவனத்தின் குளியலறை ஒன்றில் ஒரு முறை ரஜினி குளித்துக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த எஸ்.பி.முத்துராமன் அறையில் மனிதன் மனிதன் பாடல் ஒலித்துள்ளது. இந்தப் பாடல் ஆடியோ கேசட்டுக்காக தயாராகி வந்துள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட ரஜினிகாந்த், வெளியே வந்து பாடலை பலமாக பாராட்டியிருக்கிறார். இந்தப் பாடலை படத்தில் வைக்க பொருத்தமான இடம் இல்லாத காரணத்தினால் இந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை என்று ரஜினியிடம் முத்துராமன் கூறியுள்ளார்.
இவ்வளவு சிறப்பான ஒரு பாடலை எப்படி தவறவிட முடியும் என்று ரஜினி கேட்டுள்ளார். ரஜினி, இயக்குநர் எஸ்.பி முத்துராமன் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய மூவரும் கலந்து ஆலோசித்து இந்தப் பாடலை டைட்டில் பாடலாக வைக்க முடிவு செய்தார்கள். மேலும் இந்தப் பாடலுக்கு தானே லிப் சிங் செய்வதாக ரஜினி விருப்பப்பட்டார்." என்று அருணா குகன் ஏற்கெனவே பதிவிட்டிருந்தார்.
#AVMTrivia | How the ‘Manithan Manithan’ song became the Title Song
— Aruna Guhan (@arunaguhan_) August 26, 2022
One day Rajini sir was having a shower in one of the rooms in our studio. He heard the song “Manithan..manithan” being composed for the audio cassette from SP. Muthuraman sir’s room nearby. pic.twitter.com/GE6UakqswC
தமிழ் சினிமாவில் கெளபாய்
மனிதன் படம் தொடங்கியதும் ஒலிக்கும் இந்தப் பாடலுடன் பெயர்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்க, ரஜினிகாந்த் நீண்ட கெள பாய் அங்கிகள் அணிந்து இந்தப் பாடலுக்கு உதடசைத்திருப்பார்.
Step into our costume closet with me as I show you costumes from some of the biggest and most memorable @avmproductions movies ✨
— Aruna Guhan (@arunaguhan_) November 27, 2023
We are back with another trip into our Costume Closet, a special one worn by Superstar @rajinikanth himself, in Manithan for the climax fight.… pic.twitter.com/Hos3jSGT09
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் மேற்கு நாடுகளில் வெளியான கெளபாய் படங்களின் தாக்கம் பெரியளவில் தமிழ் சினிமாவில் இருந்ததாகவும், அதன் வெளிப்பாடாக பெரும்பாலான படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகளில் ரஜினி உட்பட பல நடிகர்கள் கெள பாய் அங்கி அணிந்திருப்பதைப் பார்க்கலாம் என்று கூறியிருந்தது குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது மனிதன் படத்தின் இறுதிக்காட்சியில் ரஜினிகாந்த் அணிந்திருந்த உடையை வீடியோவாக அருணா குகன் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 90ஸ் கிட்ஸின் விருப்பமான காஸ்டியூம்களில் ஒன்றான இந்த உடை பற்றிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.