Watch video : அட இது ரீலா இல்ல...? ரியலா...? விஜயின் அரபிக்குத்து பாடலை அப்படியே செதுக்கி சிதறவிட்ட சிறுவர்கள்!
கடந்த ஜுன் 22 ம் தேதி விஜயின் பிறந்தநாளன்று தினேஷ் என்ற நபர் தனது யூடியூப் பக்கத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை ரீ-க்ரீயேட் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் பீஸ்ட். மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து படம் குறித்தான ட்ரோல்களும், மீம்களும் சமூகவலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது.
இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினத்தில் வெளியிடப்பட்டது. யூ டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடல் மாபெரும் ஹிட் அடித்துள்ளது. யூ டியூப்பில் மட்டும் இதுவரை 442 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்து ரசித்துள்ளனர். மேலும், பிரபல நடிகர்கள், நடிகைகள் என பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வருகின்றனர்.
View this post on Instagram
இந்தநிலையில், கடந்த ஜுன் 22 ம் தேதி விஜயின் பிறந்தநாளன்று தினேஷ் என்ற நபர் தனது யூடியூப் பக்கத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை ரீ-க்ரீயேட் செய்து வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் நடிகர் விஜயின் நடனத்தை தினேஷ் தத்ரூபமாக ஆடி அசத்தி இருந்தார்.
Arabic kuthu recreation🔥🤩
— ⚡𝕋ℍ𝔸𝕃𝔸ℙ𝔸𝕋ℍ𝕐 𝕊𝔸ℕ𝕁𝔸𝕐ʲᵈ✨ (@Sanjay_vj__) June 29, 2022
#Varisu || @actorvijay || #Beast || #ThalapathyVijay || #thalapathy67 || pic.twitter.com/3Vh71AQ6E1
A Fan Made 😳💥❤ #ArabicKuthu @Jagadishbliss @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Beast ▪︎ #Varisu ▪︎ @Actorvijay pic.twitter.com/IIqAdXjg9f
— Namakkal OTFC (@Namakkal_OTFC) June 29, 2022
இந்த வீடியோ வெளியிட்டு 7 நாட்கள் ஆன பிறகு, தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரும்பாலும் அரபிக் குத்து ரீ-க்ரீயேட் செய்யப்பட்டதை விஜய் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் மற்றும் முகப்புத்தகத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்