RC 15 Photo leak: ஷங்கரின் RC15 ஷூட் போட்டோ ரிலீஸ்.... ராம் சரணுக்கு ஜோடி அஞ்சலியா?
ஷங்கர் இயக்கும் ஆர்.சி15 படத்தின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது
மெகா பவர்ஸ்டார் ராம் சரண் நடிக்கவிருக்கும் ஆர்.சி 15 படம் நேற்று ஆந்திராவில் தொடங்கியது . டைரக்டர் ஷங்கர் இயக்கும் இப்படமானது, ஒரு பான் இந்திய தயாரிப்பாக வெளியாகும் என்ற அறிவிப்பு முன்னதாக வந்தது.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த அஞ்சலி, சில வருடங்களாக தமிழில் சொல்லப்படும் அளவுக்கு எந்த படங்களிலும் நடிக்கவில்லை. சமீபத்தில் பக்கத்து மாநிலமான ஆந்திர சினிமாவில் களம் இறங்கிய, அஞ்சலி “ ரானு ரானு அண்டுன்னே சின்னடோ” என்ற பாடலுக்கு சூப்பராக ஆடியிருந்தார். இப்பாடல் இன்ஸ்டாவில் பயங்கர ட்ரெண்டிங் சாங்காக மாறியது. தற்போது, ஆர்.சி 15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார்.
#RC15 leaked video 👌😍#KiaraAdvani and #RamCharan
— Hemanth Boddeti (@HemanthBoddet10) October 12, 2022
Only Dm 🙏 Retweet pakka 💪 pic.twitter.com/zzHcscsNBo
இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. இந்த போட்டோவில், நடிகர் ராம் சரண் கிராமத்து கெட்-அப்பில் உள்ளார். படத்தில் இவருக்கு மனைவியான நடிகை அஞ்சலி இவர் அருகில் அமர்ந்திருக்கிறார். இவர்களுக்கு இடையில் ஒரு குழந்தையும் உள்ளது. நடிகர் ராம் சரண் இந்த படத்தில், டபுள் ஆக்ஷனில் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது.
View this post on Instagram
இதற்கு முன்பாக, நடிகர் ராம் சரண் மூன்று கதாபாத்திரம் கொண்ட ஒரு கதையில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக எந்த தகவல்களும் வெளிவரவில்லை. இந்த படத்தில் நடிகை கியாரா அத்வானியும், எஸ்.ஜே சூர்யாவும் நடிக்கவுள்ளனர் என்ற செய்தியை படக்குழுவினர் வெளியிட்டனர். லீக்கான புகைப்படத்தில் அஞ்சலி, ராம் சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக தெரிகிறது. ஆனால், படக்குழுவினர் கியாரா அத்வானிதான் இப்படத்தின் ஹீரோயின் என அறிவித்து இருந்தனர். இதனால், யார் யாருக்கு ஜோடி என குழப்பம் உண்டாகினாலும், ராம் சரண் நடிக்கும் இரட்டை வேடங்களுக்கு ஒரு ஹீரோயின் அஞ்சலி என்றும் மற்றொரு ஹீரோயின் கியாரா அத்வானியாக இருக்கலாம் என்ற விளக்கமும் சோஷியல் மீடியாக்களில் சுழன்று வருகிறது.
தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்திற்கு, தமன் இசையமைக்கவுள்ளார். இப்படமானது 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது