Rashmika mandanna: சாமி..வாயாசாமி..வள்ளியாக மாறிய சுட்டிக்குழந்தை.. ரீட்விட் செய்த ராஷ்மிகா..வைரல் வீடியோ!
புஷ்பா திரைப்படத்தின் ‘வாயா சாமி’ பாடலுக்கு நான்கு வயது குழந்தை ஒன்று டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா ரீட்வீட் செய்திருக்கிறார்.
புஷ்பா திரைப்படத்தின் ‘வாயா சாமி’ பாடலுக்கு நான்கு வயது குழந்தை ஒன்று டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அந்த வீடியோவை ராஷ்மிகா மந்தனா ரீட்வீட் செய்திருக்கிறார்.
அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா நடித்த ‘புஷ்பா தி ரைஸ்’ படம் இன்றளவும் பேசப்படுகிறது. படம் வெளியாகி ஒரு வருடம் முடிய போகும் நிலையிலும் பல பொழுதுபோக்கு செய்திகளின் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
‘வாயா சாமி’ பாடல் முதல் ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் வரை பல ஹிட்களை கொடுத்தது இப்படம். புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக உள்ளதாக அதிகாரம் பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புஷ்பா திரைப்படத்தின் ‘வாயா சாமி’ பாடலுக்கு ஒரு நான்கு வயது குழந்தை பள்ளியில் டான்ஸ் ஆடிய வீடியோ ட்விட்டரில் வெளியாகி வைரலாகி இருந்தது. வாயா சாமி பாடலை பாடிக்கொண்டே மிக க்யூட்டாக ஆடிய அந்த குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..💘
— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022
how can I? 🥹 https://t.co/RxJXWzPlsK
இந்நிலையில் இந்த வீடியோவை நடிகை ராஷ்மிகா மந்தனா ரீட்வீட் செய்தார். அதில் நடிகை ராஷ்மிகா, இந்த காணொளி எனது நாளை முழுமையாக்கி விட்டது. இந்த குழந்தையை நான் நேரில் காண முடியுமா என்று அவர் பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா புஷ்பா படம் மூலம் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனார். தொடர்ந்து பாலிவுட்டில் வரிசைக்கட்டி படங்களில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ள நிலையில், அவரது முதல் பாலிவுட் படமான ‘குட்பை’ படத்தின் ட்ரெய்லர் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த படங்கள் தவிர ரன்பீர் கபூருடன் அனிமல், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஞ்சு ஆகிய படங்களிலும் ராஷ்மிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. விஜய்யின் 66வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார்.