Watch Video: எங்கிட்டயேவா.. ராம்சரணுடன் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய கீர்த்தி.. வைரலாகும் வீடியோ..!
ராம்சரணும், கீர்த்தி சுரேஷூம் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமௌலியின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமான `ஆர்.ஆர்.ஆர்’ வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி வெளியாக இருப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா சூழ்நிலை காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்மையில், படத்தின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டது.
இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்தியில், “ ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வருகிற மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 ஆம் தேதியில் ரிலீஸ் ஆகும். இந்த இரண்டு தேதிகளும் படக்குழுவால் ப்ளாக் செய்யப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
View this post on Instagram
இதில் நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட் முதலானோர் நடித்துள்ளனர். இந்தப் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முன்னோட்டம், மேக்கிங் வீடியோ வெளியான நிலையில் படத்தில் இருந்து ‘நாட்டு நாட்டு’ ‘நட்பு’ உள்ளிட்ட பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியிடப்பட்டன. இதில் நாட்டு நாட்டு பாடலில் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் ஆடிய நடனம் அனைவருக்கும் பிடித்துப்போக, சமூகவலைதளங்கள் அனைத்திலும், அந்த பாடலுக்கு நடனமாடி நெட்டிசன்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது ராம் சரணும், கீர்த்தி சுரேஷூம் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Video of the day ❤️❤️❤️#RamCharan #KeerthySuresh dance on #NaatuNaatu at #GoodLuckSakhi pre release event @ArtistryBuzz @AlwaysRamCharan @KeerthyOfficial pic.twitter.com/VAiWtlk7nV
— ARTISTRYBUZZ (@ArtistryBuzz) January 26, 2022
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் லக் சக்தி திரைப்படம் ஜனவரி 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனையடுத்து நேற்று படத்தின் ப்ரீ லிரிஸ் நிகழ்ச்சி ஹைதாராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராம் சரண் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், இவர்கள் இருவரும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.