Rajinikanth - Kangana Ranaut: இந்திய சினிமாவின் கடவுள்.. நேரில் வாழ்த்திய ரஜினிகாந்த்.. கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி!
சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.விஜய் - நடிகை கங்கனா ரனாவத் (Kangana Ranaut) இணையும் புது படத்தின் பூஜை இன்று தொடங்கிய நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
மாதவனுடன் இரண்டாம் முறை கூட்டணி
‘தனு வெட்ஸ் மனு’ எனும் வெற்றிப் பட சீரிஸில் இணைந்து நடித்த நடிகர் மாதவன் - நடிகை கங்கனா ரனாவத் ஜோடி, மீண்டும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் இணைந்துள்ளனர். தலைவி படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் மீண்டும் இணைந்துள்ள நிலையில், ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது. நீரவ் ஷா இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றதாகவும், வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்டு இப்படம் இருக்கும் எனவும் இன்று காலை தன் ட்விட்டர் பக்கத்தில் கங்கனா மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இரு மொழிகளில் தயாராகும் திரைப்படம்
ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கும் நிலையில், தமிழ் - இந்தி என பை லிங்குவல் திரைப்படமாக இப்படம் தயாராக உள்ளது. சைக்கலாஜிக்கல் த்ரில்லர் கதைக்களத்தில் தயாராக உள்ள இப்படத்தின் பூஜை, இன்று காலை சென்னையில் நடைபெற்ற நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
On our first day of the shoot God of Indian cinema Thalaivar himself thrilled us with a surprise visit on our set.
— Kangana Ranaut (@KanganaTeam) November 18, 2023
What a lovely day!! Missing Maddy @ActorMadhavan as he joins us soon ❤️ @Tridentartsoffc @rajinikanth @sanjayragh pic.twitter.com/DNE87M9Uru
இந்நிலையில், “இந்திய சினிமாவின் தலைவர் எங்கள் பட செட்டுக்கு முதல் நாளிலேயே சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். என்ன ஒரு அழகான நாள். மேடியை மிஸ் செய்கிறேன்” என கங்கனா தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார்
தொடர் தோல்விகளில் இருந்து மீள்வாரா?
நடிகர் ரஜினிகாந்த் - கங்கனா ரனாவத் இணைந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழில் முன்னதாக கங்கனா சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த நிலையில், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் சந்திரமுகியாக நடித்த கங்கனாவின் நடிப்பும் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது.
இதேபோல், இந்தியில் கங்கனா நடித்த தேஜஸ் படமும் தோல்வியைத் தழுவியது. மேலும் இறுதியாக கங்கனா நடித்த 10 திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. இந்நிலையில், தற்போது தமிழ் - இந்தி என இரு மொழிகளிலும் அவர் நடிக்க உள்ள இப்படம் அவருக்கு கம்பேக் படமாக அமையுமா எனும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Conjuring Kannappan : ரகளையான பேய் படம்தான்.. ஆனால் குழந்தைகள் பார்க்கலாமா? கான்ஜூரிங் கண்ணப்பன் சென்சார் என்ன சொல்லுது?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

