Rajini Watched Annaatthe | ‛அண்ணாத்த பார்த்தோம்.... பேமிலி ரொம்ப ஹேப்பி...’ ரஜினி வெளியிட்ட ஆடியோ!
குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‛அண்ணாத்த’. தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி நேற்று வெளியான ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் ரஜினிகாந்த் . இது குறித்து ஹூட் செயலியில் பகிந்துள்ள ரஜினிகாந்த் “ நான் என் மகள்கள் , மருமகன் விஷால் , மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன் அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து என பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டி பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ் என்றான்.அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார். அதிர்ச்சியாக இருந்தது.. மணி 10க்கு மேல் இருக்கும்..அப்போது என்ன சார் இங்க என கேட்டேன்...இல்லை உங்களை பார்க்கனும் என்றார்.. பிஸியான ஆளாக இருப்பவர் , என்னை சந்திகனும் என்றார். எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே!” என குறிப்பிட்டுள்ளார்.
பேரனோடு அண்ணாத்த திரைப்படத்தை நேற்று பார்த்தேன். Part-1 https://t.co/6eDyTnHRb5
— Rajinikanth (@rajinikanth) October 28, 2021
பேரனோடு அண்ணாத்த திரைப்படத்தை நேற்று பார்த்தேன். Part-2 https://t.co/4LO8F8uUCQ
— Rajinikanth (@rajinikanth) October 28, 2021
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகள் மட்டுமல்லாது 90 களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த குஷ்பு , மீனா உள்ளிட்ட நடிகைகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளதும் , இமான் இசையமைத்துள்ளார் என்பதும் நாம் அறிந்ததே. படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை அதகளப்படுத்தியது நாம் அறிந்ததே . இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ட்ரைலர் நேற்று வெளியானது
Indha deepavaliku kaapu katiyachu😎
— Sun Pictures (@sunpictures) October 28, 2021
5Mil views & counting!
▶ https://t.co/fsOTrObxcS#Annaatthetrailer @rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @IamJagguBhai @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals pic.twitter.com/kiQddMV6Tx
வழக்கமாக எதாவது ஒரு செண்டிமெண்ட்டை கையில் எடுக்கும் சிவா, இப்படத்தில் அண்ணன் - தங்கை செண்டிமெண்டை கையிலெடுத்துள்ளார். அண்ணனாக ரஜினியும், தங்கையாக கீர்த்தி சுரேஷும் நடித்துள்ளனர். ரஜினியை மாமா, அத்தான் என உரிமையோடு அழைக்கும் குஷ்பு, மீனா இருவருமே ரஜினியின் முறைப்பெண்ணாக நடிப்பதாக தெரிகிறது. பக்கா கிராமத்து கதையாக உருவாகியுள்ள அண்ணாத்த பக்கா மசாலா திரைப்படம் என்பதை ட்ரைலர் பக்காவாக உணர்த்துகிறது. குடும்ப செண்டிமெண்ட், வில்லன், மாஸ் காட்சிகள், காதல் என அனைத்துமே இப்படத்தில் இடம்பெறும் என்பதை தெள்ளத்தெளிவாக சொல்கிறது அண்ணாத்த ட்ரைலர். அதுதான் சிவாவின் பாணியும் கூட.