![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Jailer Release Date: சுதந்திர தின விடுமுறையைக் குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படத்தின் ரிலீஸ் எப்போது?
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
![Jailer Release Date: சுதந்திர தின விடுமுறையைக் குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படத்தின் ரிலீஸ் எப்போது? Rajinikanth starrer Jailer movie expected to be released in august details know full details Jailer Release Date: சுதந்திர தின விடுமுறையைக் குறிவைக்கும் சூப்பர் ஸ்டார்...! ஜெயிலர் படத்தின் ரிலீஸ் எப்போது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/a76b5277406a2ed11d24ec32c345ca351682487770865574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
ஜெயிலர்:
2021ஆம் ஆண்டு நடித்த அண்ணாத்த படத்தை அடுத்து கோலிவுட்டின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஜெயிலர். கோலமாவு கோகிலா, டான் , பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கி வருகிறார் நெல்சன்.
சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஷாக்கி ஷெராஃப் என பல மொழி உச்ச நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ள நிலையில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன், ரெடின் கிங்ஸ்லி எனப் பலரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். பான் இந்தியா திரைப்படமாக இந்தப் படம் தயாராகி வரும் நிலையில், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
ரிலீஸ் எப்போது?
சென்ற ஆண்டு இறுதியில் தொடங்கி கடலூர், வேலூர், ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, கொச்சி என பல நகரங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
முன்னதாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதிகளில் ஜெயிலர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாகவும், நடிகர் ரஜினிகாந்த் தன் காட்சிகளை நிறைவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பொன்னியின் செல்வனால் ஒத்திவைப்பு:
முன்னதாக 2023 கோடை ஸ்பெஷலாக படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 படத்தின் ரிலீசைத் தொடர்ந்து ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
தொடர்ந்து தீபாவளி ரிலீசாக படம் வெளிவரலாம் என்றும், சுதந்திர தின விடுமுறை நாள்களைக் குறிவைத்து படம் வெளியாகலாம் என்றும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின.
Superstar - Nelson - Sun Pictures mass action entertainer #Jailer planning as Independence day weekend, August 10 release...
— AB George (@AbGeorge_) April 25, 2023
Rajinikanth - Mohanlal - Shivanna - Tamannaah pic.twitter.com/IyrysMlP3i
இந்நிலையில், ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சுதந்திர தின விடுமுறையைக் குறிவைத்தே சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ரிலீசாக உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இரு படங்களும் ஒரு சில நாள்கள் வித்தியாசத்தில் ரிலீசாகலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: PS 2 Nandhini: நந்தினி கதாபாத்திரத்துக்கு Spinoff படமா? மணிரத்னத்திடம் கோரிக்கை வைத்த பாரதிராஜா...வைரல் வீடியோ
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)