Rajinikanth: கெட்டப்பழக்கங்களை பழகியதற்கு காரணம் இவர்கள்தான்; அதை மாற்றியவர் என் மனைவி - நடிகர் ரஜினிகாந்த் ஓபன் டாக்
என்னுடன் ஒட்டியிருந்த மது, புகை பிடித்தல் அசைவ உணவு பழக்கங்களை மாற்றியவர் என் மனைவிதான் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒய்.ஜி மகேந்திரன் நடித்துள்ள சாருகேசி நாடகத்தின் 50ஆவது நாள் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.
”என்னை அனுமதிக்கவில்லை”:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 45 ஆண்டுகளுக்கு முன்பு ரகசியம் பரம ரகசியம் பார்க்க சென்ற போது என்னை அனுமதிக்கவில்லை. ஆனால் சாருகேசி 50வது நாள் விழாவில் தலைமை விருந்தினராக வந்தது, காலத்தின் செயல்” எனத் தெரிவித்தார். “சினிமாவிலும் நாடகத்திலும் கதை, திரைக்கதை மிகவும் முக்கியம்.
கெட்ட நண்பர்களால் கெட்டப் பழக்கங்களை பழக்கி கொண்டவன் நான். நடத்துநராக இருக்கும் போதே அதிகமாக சிகரெட் பிடிப்பேன், தினமும் மது அருந்துவேன், தினமும் இருவேளை அசைவ உணவு சாப்பிடுவேன்.
”என்னை மாற்றியவர் என் மனைவி”:
சிகரெட், மது, அசைவ உணவு மூன்றையும் தொடர்ந்து எடுத்து கொள்பவர்கள் 60 வயதை தாண்ட முடியாது, இருந்தாலும் படுக்கையில்தான் இருக்க வேண்டிய சூழல் இருக்கும்.
மூன்று பழக்கங்களும் இருந்த என்னை அன்பு மூலம் மாற்றியவர் என் மனைவி. இந்த பழக்கங்களை விடுவது சிரமம், ஆனால் சரியான மருத்துவரை அணுகி , அன்பால் திருதினார் என் மனைவி.
View this post on Instagram
உங்களுக்கே திருமணத்திற்கு முன்பு எப்படி இருந்தேன், திருமணத்திற்கு பிறகு எப்படி இருந்தேன் என்று, என் மனைவியை எனக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற முறையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நான் கடன்பட்டுள்ளேன் என நடிகர் ரஜினிகாந்த், நிகழ்ச்சியில் பேசினார்.
Also Read: Watch Video Samantha: ”பலம் சாப்பாட்டுல இல்ல.. இங்கேயும் இருக்கு” - சமந்தா பதிவிட்ட வாவ் வீடியோ..!





















