Sarathkumar on Rajinikanth: செம ஆக்ஷன் ஸ்டோரி! இருவரும் போலீஸ் ஆபிஸர்ஸ்! சரத்குமாருக்கு ரஜினிகாந்த் சொன்ன கதை!
”அப்போ காரின் பின் சீட்ல அமர்ந்து ஒருத்தர் பேப்பர் படிச்சுட்டு இருக்காரு. அப்போ தெரு லைட்ல ஒருத்தர் பீடியை பற்ற வைக்குறாரு அதுதான் சரத் நீங்க.”

தமிழ் சினிமாவில் ஒரே காலக்கட்டங்களில் இறுவேறு ரசிகர்களை கொண்ட நடிகர்களாக வலம் வந்தவர்கள் ரஜினிகாந்த் , சரத்குமார். ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் அடையாளமாக பார்க்கப்பட்டாலும் , இளம் நடிகர்களின் வருகையையும் ரசிகர்கள் கொண்டாட தவறவில்லை. இந்த சூழலில் சரத்குமார் ரஜினிகாந்த் இருவருமே பீக்கில் இருந்த காலக்கட்டங்களில் ஒன்றாக இணைந்து படம் எடுப்பதற்கான முயற்சியை முன்னெடுத்திருக்கிறார் ரஜினிகாந்த். அது குறித்த நினைவுகளை சரத்குமார் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்
View this post on Instagram
"எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நடிகர் சங்கம் ஒற்றுமையாக இருக்கனும். கோச்சடையான் திரைப்படத்தின் பொழுது நானும் ரஜினிகாந்தும் லண்டனில் சந்தித்தோம் .அப்போது அவருடன் பேசிக்கொண்டிருப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்போது காஞ்சனா படத்தை பற்றி ரஜினி பாராட்டி பேசினார். காஞ்சனா படம் வெற்றிக்கு காரணம் என்ன என்பது குறித்து பார்த்தேன். படத்தில் உங்களது எண்ட்ரி அருமையாக இருந்தது. அது படத்தை நல்லா தூக்கி விட்டுருச்சுனு சொன்னாரு. எனக்குனு ரஜினிகாந்த் ஒரு கதை சொன்னாரு. அவருடைய கதை அது. சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் இணைந்து நடிக்கும் படம்னு சொல்லிதான் கதை சொன்னாரு. பண்ணா எப்படி இருக்கும்னு கேட்டாரு சூப்பரா இருக்கும்னு சொன்னேன். படத்துல ரெண்டு பேருமே போலிஸ் ஆஃபிஸர்ஸ். சுரேஷ் கிருஷ்ணாவைத்தான் படத்தை இயக்க ஒப்பந்தம் செய்தார். காலத்தின் ஓட்டத்தால் அந்த படம் எடுக்க முடியாமல் போயிடுச்சு. எனக்கு அவர் சொன்ன ஓபனிங் காட்சி இன்னும் நியாபகம் இருக்கு. நல்லா டிராமட்டிக்கா சொன்னாரு. ஓபனிங்ல டாப் ஆங்கிள்ல துறைமுகத்தை காட்டுறோம் . அப்போ கருப்பு கார்ல நிறைய பேர் சரசரனு வர்றாங்க. அப்போ காரின் பின் சீட்ல அமர்ந்து ஒருத்தர் பேப்பர் படிச்சுட்டு இருக்காரு. அப்போ தெரு லைட்ல ஒருத்தர் பீடியை பற்ற வைக்குறாரு அதுதான் சரத் நீங்க. அப்படினு சொன்னாரு. நானும் அவரும் சேர்ந்து ஒரு குற்றவாளிகளை கண்டுபிடிக்க வெளிநாட்டுக்கு போறோம். திரும்ப வரும்பொழுது நான் வீல் சேர்ல வற்றேன் . அவர் என்னை தள்ளிட்டு வற்றாரு . இப்படித்தான் அந்த கதை இருந்தது “ என சுவாரஸ்ய தகவலை பகிர்ந்திருக்கிறார் சரத்குமார்.





















