மேலும் அறிய

Watch Video: யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய ரஜினிகாந்த்.. நாளைக்கு என்ன திட்டம்?

ரஜினிகாந்த், இன்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவரது கால்களை தொட்டுக் கும்பிட்டு வணங்கினார்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்நிலையில், ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு முன் இமயமலைக்கு ஆன்மீகப் பயணம் கிளம்பிய  நடிகர் ரஜினிகாந்த், ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட பல இடங்களுக்குச் சென்று தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் எனப் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்து வரும் ரஜினிகாந்த், இன்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து இன்று மாலை அவர் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்திப்பார் எனக் கூறப்பட்டது. அதன்படி யோகி ஆதித்யநாத்தை சந்தித்த ரஜினிகாந்த் அவரது காலில் விழுந்து தொட்டுக் கும்பிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று காலை லக்னோவில் உள்ள பிரபலமான திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்த் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்  உடன் ஜெயிலர் படத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், திரையரங்குக்கு வருவதை யோகி ஆத்யநாத் தவிர்த்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த வாரம் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று துறவிகளை சந்தித்து அவர்களிடம் உரையாடிய ரஜினிகாந்த், பின்னர் உத்தரகாண்டில் இருக்கும் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.

தொடர்ந்து துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானத்தில் ஈடுபட்ட ரஜினிகாந்த், கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட வீடியோவும் இணையத்தில் வைரலானது. 

இந்நிலையில் நாளை ரஜினிகாந்த் அயாத்தி ராமர் கோயிலுக்கு ரஜினிகாந்த் தரிசனம் செய்ய செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. முன்னதாக ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் 10 நாட்களில்  சுமார் 500 கோடிகளை உலகம் முழுவதும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஜெயிலர் திரைப்படம் இரண்டாவது வாரமாக தொடர்ந்து திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடி வருகிறது. ரஜினி நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Senthil Balaji : ADMK PMK Alliance | Aadhav Arjuna | ”என்ன மன்னிச்சுடுங்க” இபிஎஸ் குறித்த ஒருமை பேச்சு! வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!Nainar vs Annamalai |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Elon Musk: ”நன்றி கெட்ட ட்ரம்ப், நான் இல்லைன்னா வீட்டுக்கு தான் போயிருக்கணும்” - எலான் மஸ்க் ஆவேசம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
Thug Life Box Office: வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - வசூலை வாரிக்குவித்ததா தக் லைஃப்? கமல்ஹாசனின் முதல் நாள் சம்பவம்
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பக்கா ஸ்கெட்சுடன் மதுரை வரும் அமித் ஷா.. காய் நகர்த்தும் குருமூர்த்தி.. இனி பரபரப்புக்கு பஞ்சமிருக்காது
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
பாமகவின் குழப்பத்திற்கு காரணம்.. யார் அந்த வாத்தியார் ?.. போட்டு உடைத்த அன்புமணி
China Unveils Nuclear Missile: அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
அமெரிக்காவுக்கே அச்சுறுத்தல்; யப்பா.. 12,000 கி.மீ பாயும் சீனாவின் அணு ஆயுத ஏவுகணைய பாருங்க
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
Chinmayi: கோயிலில் அழுதேன்.. கடவுளைத் திட்டுவேன்.. பாடகி சின்மயி உருக்கம்
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி..
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி.. "ஏழைகளின் நலனே முக்கியம்.. கருணையுள்ள அரசு"
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Chinmayi: ஒரு வாரத்துக்கு முன்னாடி மன்னிப்பு கேட்க சொன்னாங்க.. மனம் திறந்த சின்மயி
Embed widget