Coolie Vs War 2 : தமிழில் கூலி...இந்தியில் வார் 2..எந்த படத்திற்கு அதிக வரவேற்பு ?
ஆகஸ்ட் 14 ஆம் தேதி ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி மற்றும் இந்தியில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள வார் 2 படத்திற்கு இடையில் கடுமையாக போட்டி நிலவி வருகிறது

கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கி ரஜினி நடித்துள்ள கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. நாகர்ஜூனா , சத்யராஜ் , உபேந்திரா , செளபின் சாஹீர் , ஸ்ருதி ஹாசன் என படத்தில் ஐந்து மொழி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு , இந்தி , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது
Coolie Varaan sollikko..!😎 #Chikitu Music Video is out now!#GetChikitufied 📣💥
— Sun Pictures (@sunpictures) June 25, 2025
▶️ https://t.co/eeQaA8RWor#Coolie releasing worldwide August 14th @rajinikanth @Dir_Lokesh @anirudhofficial #TRajendar @iamnagarjuna @nimmaupendra #SathyaRaj #SoubinShahir @shrutihaasan… pic.twitter.com/DuG44VlJtg
கூலி ப்ரீ பிஸ்னஸ்
கூலி திரைப்படம் ரூ 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இந்த படத்திற்கு உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. கூலி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமம் ரூ 130 கோடிக்கும் சேட்டலைட் உரிமம் 90 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது கூலி படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமம் தெலுங்கில் ரூ 45 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. தமிழில் கூலி படத்தின் வெளியீட்டு உரிமை ரூ 110 கோடிக்கு சன் பிக்ச்சர்ஸ் விற்பனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரவேற்பே இல்லாத வார் 2
கூலி படம் வெளியாகும் அதே நாளில் இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள வார் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் வார் 2 திரைப்படத்திற்கு குறைவான வரவேற்பு இருந்து வருகிறது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளபோதும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கூலி படத்திற்கே அதிக வரவேற்பு இருந்து வருகிறது.
இந்தியில் கூலி படத்தின் டைட்டில் மஜ்தூர் என மாற்றப்பட்டுள்ளது. கூலி என்கிற டைட்டிலில் ஏற்கனவே அமிதாப் பச்சன் நடித்துள்ள படம் வெளியாகியிருப்பதால் அதே டைட்டிலை வைக்க படத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. தென் இந்திய மாநிலலங்களில் கூலி படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் வார் 2 படத்திற்கு பெரியளவில் வரவேற்பு இருந்து வருகிறது.





















