மேலும் அறிய

47 Years Of Rajinism : சினிமாவுக்கு வந்து 47 ஆண்டுகள்... மனைவியுடன் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினிகாந்த்!

ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

நடிகர் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 47 ஆண்டுகள் ஆனதையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி, வயதில் 71 ஆண்டுகளை பூர்த்தி செய்தாலும் இன்றளவும் தமிழ் சினிமாவின் கிங் மேக்கராகவே உள்ளார்.  தவிர்க்க முடியாத உச்சநட்சத்திரமாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

சினிமாவில் ரஜினி கடந்து வந்த பாதை என்பது மிக சுலபமானது இல்லை. ஆனால் தனது ஸ்டைல் மூலம் ரசிகர்களை அவர் எளிதில் கவர்ந்தார். பல வெற்றி, தோல்விகளைப் பார்த்த அவர் மற்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இயற்பெயரை சிவாஜி ராவ் என்ற நிலையில் தனது பெயரை ரஜினியாக மாற்றிக் கொண்டார். கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தன. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aishwaryaa Rajinikanth (@aishwaryarajini)

படையப்பா படத்தில் வரும் வசனம் போல, இன்றளவும் வயசானாலும் அவர் ஸ்டைலும், அழகும் மாறவேயில்லை என சொல்லும் அளவுக்கு அவரது ஒவ்வொரு அசைவிலும் அந்த மேனரிசங்களை காணலாம். பாலச்சந்தர் பட்டறையிலே பட்டை தீட்டப்பட்ட ரஜினி பல இடங்களில் தனது குருநாதர் பாலசந்தரை நினைவு கூர்ந்துள்ளார். அரசியல் சர்ச்சை, தனது மகள்களின் விவாகரத்து, தன்னை சுற்றி பல நெகட்டிவான சம்பவங்கள் தொடர்ந்தாலும் ரஜினி என்றும் பாசிட்டிவ் மனிதராகவே உள்ளார். அதனால் பிற நடிகர்களின் ரசிகர்களுக்கும் அவரை பிடிக்கிறது. 

இதனிடையே ரஜினியின் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில் ரஜினியின் மூத்த மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா நேற்றைய தினம் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் சுதந்திர தினத்திற்கு ரஜினிகாந்திற்கு தேசிய கொடி குத்தி அழகு பார்க்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகள் ஆகிறது.  தியாகங்களுக்கும், போராட்டங்களுக்கும் வலிமைக்கும் வணக்கம்..  அதேபோல் 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் கடின உழைப்பு.. அர்ப்பணிப்பு..அவருக்கு மகளாக பிறந்ததில் பெருமை என பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் 47 Years Of Rajinism நிகழ்வை கொண்டாடும் வகையில் ரஜினி தன் மனைவி லதாவுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் ரஜினிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
‘விஸ்வநாத் & சன்ஸ்’ படப்பிடிப்பில் ராதிகாவிடம் அடி வாங்கிய ஜி.வி.பிரகாஷ்.. அவரே சொன்ன தகவல்
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி
Dharman : தர்மன் படத்தில் ரஜினியின் மருமகனாகவும் வில்லனாகவும் நடிக்கு ராம் பொத்தினேனி

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
KTM 390 Duke Vs RE Guerrilla 450 Apex: ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
ரக்கட் பாய்களுக்கு நடுவுல போட்டி.! கேடிஎம் 390 டியூக்-ஆ.? ராயல் என்ஃபீல்ட் கெரில்லா 450 அபெக்ஸ்-ஆ.? எது சிறந்தது.?
Embed widget