Annaatthe Release: 1100 தியேட்டர்கள்... வெளிநாடுகளை அலறவிடப்போகும் அண்ணாத்த... !
அமெரிக்காவில் மட்டும் 677 திரையரங்குகளில் 'அண்ணாத்தே' திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்தே’ இந்தியாவைப் போலவே வெளிநாட்டிலும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் இப்படம் வெளிநாடுகளில் 1,100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ், இப்படம் தமிழ் படத்தின் மிகப்பெரிய வெளிநாட்டு வெளியீடு என்று கூறியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 677 திரையரங்குகளில் 'அண்ணாத்தே' திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது. கணிசமான இந்தியர்களைக் கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸில், படம் 117 திரைகளில் வெளியிடப்படும்.
#Annaatthe gets the biggest overseas release for a Tamil movie! 1100+ theatres & counting!#AnnaattheBiggestRelease
— Sun Pictures (@sunpictures) November 2, 2021
Check theatre list here: https://t.co/hMHmn19IH4@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @khushsundar @Actressmeena16 @vetrivisuals pic.twitter.com/lroSeuY38P
மலேசியாவில் 110 திரையரங்குகளிலும், அண்டை நாடான சிங்கப்பூரில் 23 திரையரங்குகளிலும் படம் திரையிடப்படுகிறது. தீவு நாடான இலங்கையில் 86 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்படவுள்ளது. கனடாவில் 17 திரையரங்குகளிலும், இங்கிலாந்தில் 35 திரையரங்குகளிலும் வெளியாகவுள்ளது. ஐரோப்பாவில் 43 திரையரங்குகளிலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 85 திரையரங்குகளிலும் வெளியாகிறது.
படம் நாளைக்கு ரிலீஸாக உள்ள நிலையில், நிமிடத்துக்கு நிமிடம் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. ரஜினிகாந்த் தவிர, நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைக்க, வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குடும்பங்கள் கொண்டாட நாளை முதல் உலகமெங்கும் பிரம்மாண்ட வெளியீடு!@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @prakashraaj @khushsundar @Actressmeena16 @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals #AnnaattheDeepavali pic.twitter.com/HXJMaT68GA
— Sun Pictures (@sunpictures) November 3, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்