மேலும் அறிய

Rajini - Latha: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி... 43வது திருமண நாளை கொண்டாடிய ரஜினிகாந்த் - லதா!

Rajini - Latha : நடிகர் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் தங்களின் 43வது திருமண நாளை கொண்டாடிய இந்த வேளையில் அவர்களின் திருமணம் எப்படி நடந்தது என்பது பற்றிய ஸ்வாரஸ்யமான பிளாஷ்பேக் இதோ :

தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத ஒரு வெற்றி நாயகனாக இன்றும் திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். 72 வயதிலும் இன்றைய இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படு சுறுசுறுப்பாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் வெற்றியின் ரகசியத்திற்கு பின்புலமாக இருப்பவர் அவரின் அன்பு மனைவி லதா ரஜினிகாந்த். இந்த ஆதர்ஷ தம்பதிகளின் 43வது திருமண நாள் இன்று. அவர்களின் இந்த திருமணம் பந்தம் எப்படி துவங்கியது தெரியுமா? 

Rajini - Latha: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி... 43வது திருமண நாளை கொண்டாடிய ரஜினிகாந்த் - லதா!

உச்சபட்ச நடிகராக தமிழ் சினிமாவில் வட்டமிட்ட நடிகர் ரஜினிகாந்தை  திருமணம் செய்து கொள்ள பல பெண்கள், நடிகைகள் என பலரும் ஆசைப்பட்டாலும் அவருக்கு யார் மீதும் ஈர்ப்பு ஏற்படவில்லை. 'தில்லு முல்லு' படத்தின் ஷூட்டிங் சமயத்தில் எத்திராஜ் கல்லூரியை சேர்ந்த சில மாணவிகள் தங்களின் கல்லூரி சிறப்பிதழுக்காக ரஜினியை பேட்டி எடுப்பதற்காக வந்திருந்தனர். அந்த குரூப்பில் ஒருவராக வந்த லதா, ரஜினியை பேட்டி எடுக்க வந்தது பற்றி கூற அவரும் சம்மதித்துள்ளார். 

சரமாரியாக லதாவின் கேள்விகள் பறக்க அது அனைத்திற்கும் மிகவும் அழகாக பொறுமையாக பதிலளித்து வந்த ரஜினிக்கு லதாவின் அழகும், புத்திசாலிதான் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. திருமணம் பற்றி லதா கேள்வி கேட்டதும் "உங்களை போல பெண் கிடைத்தால் உடனே திருமணம் தான்" என மறைமுகமாக லதாவுக்கு ப்ரொபோஸ் செய்தார் ரஜினி. உடனே லதா பற்றி விசாரிக்க துவங்கிய போது அவருக்கு கிடைத்த ஒரு தகவல் தான் அவர் ஒய்.ஜி.மகேந்திரன் மச்சினிச்சி என்பது. ஏற்கனவே நட்பு ரீதியாக ஒய்.ஜி.மகேந்திரன் - ரஜினி உறவு நல்ல விதமாக இருந்த நிலையில் லதாவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் தனது விருப்பத்தை ஒய்.ஜி.மகேந்திரனிடம் தெரிவித்தார். முதலில் அவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பின்னர் குடும்பத்தினருடன் பேசுவதாக தெரிவித்துள்ளார். 

Rajini - Latha: தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடி... 43வது திருமண நாளை கொண்டாடிய ரஜினிகாந்த் - லதா!

லதா குடும்பத்தினருக்கும் இந்த திருமணத்தில் சம்மதம் என்றாலும் அதை கொஞ்சம் சீக்ரெட்டாக வைத்துள்ளனர். எப்படியோ அதை தெரிந்து கொண்டு செய்தித்தாளில் செய்தியாக பத்திரிகையாளர்கள் வெளியிட்டனர். அமைதி காத்த ரஜினி ஒரு நாள் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் எப்படி லதாவை சந்தித்தார், எப்படி திருமணத்திற்கு சம்மதம் வாங்கினார் என அனைத்தையும் சொல்லி முடித்தார். மேலும் தன்னுடைய திருமணத்தை மிகவும் எளிமையாக ஏழுமலையான் சன்னதியில் வைத்து நடத்த முடிவு எடுத்துள்ளதாகவும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் யாரும் அங்கு வந்து இடையூறு செய்ய வேண்டும் என்றும் பணிவுடன் கேட்டுக் கொண்டார். 

ரஜினி சொன்னபடி லதாவுடன் 1981ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி அவர்களின் திருமணம் உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மத்தியில் நடைபெற்றது. பின்னர் அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி திருமணம் முடிந்து இரண்டு வாரத்திற்கு பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. அன்று துவங்கிய இவர்களின் திருமண பந்தம் இன்று வரை மிகவும் அன்யோன்யமாகவும், சிறப்பாகவும் பயணிக்கிறது. மேலும் பல ஆண்டுகள் இதே ஆரோக்கியத்துடனும், அன்புடனும் அவர்கள் இணைந்து பல திருமண நாளை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் தலைவருக்கும் லதா அம்மாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget