Rajinikanth 170: “தலைவரு வேற ரகம்” .. மீண்டும் போலீஸ் கதையில் ரஜினி.. இணைந்து நடிக்கும் பாகுபலி பட நடிகர்..!
அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில் , மஞ்சு வாரியரைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் அடுத்தப் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ஒருவர் இணைய இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது படத்தில் நடிகர் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் மற்றும் ஃபகத் ஃபாசில் நடிப்பதாக தகவல்களாக வெளியானதைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு பெரிய நடிகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
600 கோடிகளை வசூல் செய்து பிரம்மாண்ட சாதனையை செய்திருக்கிறது ஜெயிலர் திரைப்படம். ஜெயிலர் படத்தின் வெற்றிக் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு தற்போது த.செ.ஞானவேல் இயக்கும் தனது 170 ஆவது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். ஜெய் பீம் படத்தில் ஆழமான சமூக கருத்தை பதிவு செய்த இயக்குநர் இரண்டாவது படமாக ரஜினியை இயக்குகிறார். இந்தப் படத்தை மிகப்பெரிய அளவில் உருவாக்க இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் இணைந்துவரும் நடிகர்களில் பெயர்களை வைத்தே சொல்லிவிடலாம். சமீபத்தில் இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு ரஜினியின் படத்திற்கு சம்பவம் பெரிதாகிக் கொண்டேதான் இருக்கிறது.
யார் யார் நடிக்கிறார்கள்?
கோலிவுட்டில் எப்படி ரஜினியோ அதே மாதிரி பாலிவுட்டில் போற்றப்படும் நடிகர் அமிதாப் பச்சன். இவர்கள் இருவரையும் ஒரே படத்தில் பார்க்கும் அனுபவத்தை கற்பனை செய்துபாருங்கள். இயக்குநர் ஞானவேல் இயக்கும் படத்தில் முதல் இணைப்பாக வந்து சேர்ந்தவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அமிதாப் பச்சன். மேலும் மாமன்னன் படத்தில் ரத்தினவேல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகர் ஃபகத் ஃபாசில் மற்றும் அசுரன் படத்தில் நடித்த மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
மீண்டும் ஒரு முறை ரஜினி இந்தப் படத்தில் போலீஸாக நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நானியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஹீரோவாக நடித்துவரும் தன்னால் வில்லனாக நடிக்க முடியாது என்று நானி இந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ரஜினி படத்தில் பாகுபலி பட புகழ் மற்றும் அவரின் மிகப்பெரிய ரசிகரான ரானா டகுபதி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது படப்பிடிப்பு
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் இந்தப் படத்தின் வேலைகள் நடந்துவர மறுபக்கம் தற்போது லியோ படத்தின் இறுதிகட்ட வேலைகளை முடித்துவிட்டு ரஜினியின் அடுத்தப் படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

