மேலும் அறிய

Lawrence Vetrimaaran Movie: விரைவில் படப்பிடிப்பு.. ராகவா லாரன்ஸ் - வெற்றிமாறன் இணையும் `அதிகாரம்’!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் திட்டமிடப்பட்டுள்ள `அதிகாரம்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் திட்டமிடப்பட்டுள்ள `அதிகாரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ள இந்தக் கதையை, இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்குவார் எனக் கூறப்பட்டுள்ளது. 

நடிகர் ராகவா லாரன்ஸ் ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் எஸ். கதிரேசன் இயக்கத்தில் `ருத்ரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், எஸ்.கதிரேசன் தயாரிப்பில் அடுத்த திரைப்படமாக, இயக்குநர் வெற்றிமாறனின் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்க, துரை செந்தில் குமார் இயக்குவதாக கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. இந்தத் திரைப்படம் ஆக்‌ஷன் ஜானரில் உருவாகி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், நடிகர் ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. 

Lawrence Vetrimaaran Movie: விரைவில் படப்பிடிப்பு.. ராகவா லாரன்ஸ் - வெற்றிமாறன் இணையும் `அதிகாரம்’!

இந்நிலையில், இன்று `அதிகாரம்’ படக்குழுவினரான நடிகர் ராகவா லாரன்ஸ், படத்தின் கதையாசிரியரான இயக்குநர் வெற்றிமாறன், இயக்குநர் துரை செந்தில் குமார், தயாரிப்பாளர் எஸ்.குமரேசன் ஆகியோர் சந்தித்துக் கொண்ட புகைப்படம் ஃபைவ் ஸ்டார் க்ரியேஷன்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 

``பொல்லாதவன்’, `ஆடுகளம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு, நானும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் பணியாற்றுவது குறித்து பேசியுள்ளோம். எனினும், சமீபத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. வெற்றிமாறன் என்னிடம் படத்தின் கதைச் சுருக்கத்தைக் கூறினார். அது எனக்கு பிடித்திருந்தது. இந்தத் திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இது ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது’ என `அதிகாரம்’ படத்தின் அறிவிப்பு வெளியான போது கூறியிருந்தார் தயாரிப்பாளர் எஸ்.குமரேசன். 

Lawrence Vetrimaaran Movie: விரைவில் படப்பிடிப்பு.. ராகவா லாரன்ஸ் - வெற்றிமாறன் இணையும் `அதிகாரம்’!

மேலும், அவர், `இந்தத் திரைப்படத்தை நாங்கள் பான் இந்தியத் திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது’ எனவும் கூறியிருந்தார். 

இயக்குநர் வெற்றிமாறன் தன் இயக்கத்தில் `விடுதலை’, `வாடிவாசல்’ ஆகிய திரைப்படங்களில் பணியாற்றி வருவதால், அவரது உதவி இயக்குநராக இருந்து, `எதிர்நீச்சல்’, `கொடி’, `காக்கிச் சட்டை’ முதலான திரைப்படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்தத் திரைப்படத்தை இயக்குவார் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget