Dhanush In Avengers Doomsday: என்னது! உண்மையா? - அவெஞ்சர்ஸ் உலகில் தனுஷ்... பரபரப்பை கிளப்பும் மாஸ் தகவல்!
ரூஸோ பிரதர்ஸ் இயக்கவிருக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தனுஷ்
மார்வெல் தயாரிப்பில் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ரூஸோ பிரதர்ஸ் இயக்கவிருக்கும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மார்வெல் ஸ்டுடியோஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதன்படி, ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் அவெஞ்சர்ஸ் படத்தில் நடிக்க உள்ளதாகவும், ஆனால் அயர்ன் - மேன் கதாபாத்திரமாக இன்றி டாக்டர் டூம்(Doctor Doom) எனப்படும் வில்லன் கதாபத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
Talks come about that #Dhanush might play a role in the upcoming Russo Brothers🔥 #AvengersDoomsday, Dhanush had already worked in the Russo brothers' previous film #TheGrayMan. pic.twitter.com/k4m4V1b5v8
— CINEMA 360 (@Cinemaa_Updates) August 6, 2024
மார்வெல் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. 2026ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே(Avengers Doomsday) திரைப்படமும், 2027ம் ஆண்டு மே மாதம் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ்(Avengers Secret Wars) படமும் வெளியாக உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு பிறகு எந்த எவெஞ்சர்ஸ் படமும் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் அடுத்த அவெஞ்சர்ஸ் படத்திற்கு உலகளவில் ரசிகர்களை ஈர்க்க படக்குழு முடிவு செய்துள்ளது. மார்வெல் படங்களுக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை கருத்தில் கொண்டு தனுஷை இந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ரூஸோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் சிறிய காட்சி என்றாலும் தனுஷின் நடிப்பை படக்குழுவினர் உட்பட அனைவரும் பாராட்டி இருந்தார்கள்.
ராயன்
தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் திரையரங்கில் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. செல்வராகவன் , எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன் , துஷாரா விஜயன் , காலிதாஸ் ஜெயராம் , பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து ஏ.ஆர் ரஹமான் இசையமைத்துள்ளார். ராயன் படம் உலகளவில் இதுவரை ரூ 100 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக ராயன் படம் முதலிடம் பிடித்துள்ளது