என்னது தப்பா பேசினானா? அதிர்ச்சியடைந்த தமிழ் ரசிகர்களுக்கு ராஷி கண்ணா பதில்..
அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்
ராஷி கண்ணா தனது ஹிந்திப் படமான ருத்ராவை விளம்பரப்படுத்தும் போது தென்னகத் திரைப்படத் துறையைப் பற்றி கூறியது நெட்டிசன்கள் மத்தியில் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ராஷி தென்னிந்தியத் துறையினர் பெண் நடிகர்களை பாலியல் ரீதியாகவே அணுகுவதாகவும், பெண்களை புண்படுத்தும் வகையில் மில்கி, லஸ்ஸி என பெயர்களைக் கொண்டு அழைப்பதாகவும், வெறும் கவர்ச்சியான முகங்களுக்காக மட்டுமே நடிக்க வைப்பதாகவும் சொன்னதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இவை புனையப்பட்டவை என்றும் அனைத்து மொழிப் படங்கள் மீதும் தனக்கும் மரியாதை இருப்பதாகவும் நடிகை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
🙏🏻😊 pic.twitter.com/yQa1nOacEY
— Raashii Khanna (@RaashiiKhanna_) April 6, 2022
ராஷி கண்ணா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அறிக்கைகளை நிராகரித்து ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதில், "என்னைப் பற்றி தவறாகப் பேசும் சிலர் தென்னிந்திய திரைப்படங்கள் சமூக ஊடகங்களில் சில புனையப்பட்ட கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். அதைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவுசெய்து நிறுத்துங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நான் பணியாற்றும் ஒவ்வொரு மொழிப் படத்தின் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. எல்லோரிடமும் அன்பாக இருப்போம்." எனக் கூறியுள்ளார்.
View this post on Instagram