மேலும் அறிய

RKFI: மோசடி கும்பல்! நடிக்க கூப்பிட்டா ஜாக்கிரதை! அலெர்ட் செய்யும் ராஜ்கமல் நிறுவனம்!

Raaj Kamal Films International: நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்தது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் மணிகண்டன் என்பவர் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், “ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்கு நடிகை, நடிகர்கள் தேவை, ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என சிலர் போலி விளம்பரத்தை சமூக வலைதளங்களில் பரப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிகண்டன் என்பவர் அந்நிறுவனத்தில் CEO ஆக இருப்பதாகவும் தங்கள் நிறுவனம் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்தும் தயாரித்தும் புதிய திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாய்ப்பிற்கு பொதுமக்களிடமிருந்து கூகுள்-பே மூலம் பணம் அனுப்ப வேண்டும் என மணிகண்டன் என்பவர் சமூக வலைதளத்தில் விளம்பரம் செய்து பண மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RKFI: மோசடி கும்பல்! நடிக்க கூப்பிட்டா ஜாக்கிரதை! அலெர்ட் செய்யும் ராஜ்கமல் நிறுவனம்!

இந்த மோசடியில் ஆகாஷ் என்ற நபரிடம் 42 ஆயிரம் ரூபாய் ஏமாற்றி பணம் வசூலித்து உள்ளதாகவும், பின்னர் அவர் பட நிறுவனத்தில் வந்து கேட்டப்போது தான் தங்களுக்கு இந்த மோசடி குறித்து தெரியவந்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கம்

இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் ட்விட்டர் பக்கத்தில், எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டையும் நாங்கள் நியமிக்கவில்லை. இது தொடர்பான செய்திகள் வந்தால் நம்ப வேண்டாம்.மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜெண்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். எங்களது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன் மூலம் எச்சரிக்கிறோம்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க..

Modi Criticize: 56 இன்ச் சதையை துளைக்க 79 நாட்கள்: முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி? - வெளியான கடும் விமர்சனம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
மோடி டூ ஸ்டாலின்.. லிஸ்டில் இவருமா? இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிப்பவர்கள் யார்? ஓர் அலசல்!
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பாலிவுட்...அட்லி கொடுத்த நெத்தியடி பதில்
Vijay Sethupathi :
Vijay Sethupathi : "இது என் படத்தோட ப்ரோமோஷன்..அத பத்தி ஏன் பேசனும்?" சூடான விஜய் சேதுபதி
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு  விளக்கம்
விஜய் பங்கேற்ற நிகழ்ச்சியில் திருமா பங்கேற்க கூடாது என நான் அழுத்தம் கொடுத்தேனா? - அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
மதுரை மக்களே உஷார்.. நாளை (17-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் விவரம் இதோ
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
CM Stalin: மைனாரிட்டி பாஜக அரசே..! அராஜகம், சர்வாதிகாரம் - கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின், காரணம் என்ன?
Embed widget