மேலும் அறிய

ஹேப்பி பர்த்டே பாடும் துல்கர்.. சைக்கோ த்ரில்லராக உருவாகும் `சுப்’.. வெளியானது டீசர்!

இயக்குநர் ஆர்.பால்கியின் `சுப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் முதல் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த திரைப்பட இயக்குநர் குரு தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் ஆர்.பால்கியின் `சுப்’ என்ற த்ரில்லர் திரைப்படத்தின் முதல் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மறைந்த திரைப்பட இயக்குநர் குரு தத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது. `சுப்’ திரைப்படத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், சன்னி தியோல், பூஜா பட், ஷ்ரேயா தன்வந்தரி முதலானோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். 

`ஹேப்பி பர்த்டே’ பாடலைப் பாடிக் கொண்டே நடிகர் துல்கர் சல்மான் செய்தித்தாள்களை வைத்து மலர்களை செய்வதாகவும், சன்னி தியோல் கதாபாத்திரத்தையும் காட்டும் இந்த டீசரில், படத்தின் தலைப்பின் கீழ் ‘Revenge of the Artist’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 80களின் பிரபலமான பாலிவுட் பாடலான `வக்த் நே கியா க்யா ஹசீம் சிதம்’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறது. 

சைக்காலஜிக்கல் த்ரில்லர் பாணியிலான இந்தத் திரைப்படம் பரிசோதனை முயற்சியாக உருவாக்கப்படுவதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார் நடிகர் துல்கர் சல்மான். `பால்கி சார் என்னிடம் `சுப்’ படத்தை வழங்கிய போது, நான் அதிர்ச்சியடைந்தேன். `இந்தக் கதாபாத்திரத்தில் என்னை யோசித்து பார்த்தீர்களா? நான் இதுவரை செய்திராத கதாபாத்திரம் இது. வழக்கமானது அல்ல. இது பரிசோதனை படம் என்பதால் நானும் ஆர்வமாக இருக்கிறேன். படம் வெளிவரும் போது, அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள்’ எனக் கூறியிருந்தார். 

ஹேப்பி பர்த்டே பாடும் துல்கர்.. சைக்கோ த்ரில்லராக உருவாகும் `சுப்’.. வெளியானது டீசர்!

View this post on Instagram
 
A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)

கடந்த ஆண்டு, திரைப்பட இயக்குநர் குரு தத் இறந்த நாளின் போது இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது. மேலும், குரு தத்திற்கு இந்தப் படத்தை சமர்ப்பிப்பதாகவும் இயக்குநர் பால்கி தெரிவித்திருந்தார். படத்தின் முதல் மோஷன் போஸ்டரில் குரு தத்தின் படம் இடம்பெற்றிருந்ததோடு, `ப்யாஸா’ படத்தின் பிரபல பாடலான `யே துனியா அகர் மில் பி ஜாயே தோ க்யா’ பாடலும் இடம்பெற்றிருந்தது. 

`சுப்’ படத்தின் வெளியீட்டு தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்தப் படத்தை கௌரி ஷிண்டே, ஆர்.பால்கி, ராகேஷ் ஜுஞ்சுன்வாலா ஆகியோர் தயாரித்துள்ளனர். அமித் த்ரிவேதி `சுப்’ படத்திற்குப் பின்ணணி இசையை அமைத்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget