மேலும் அறிய

Rashmika Mandanna : பாராட்டுக்களை அள்ளும் ஸ்ரீவல்லி.. சிறந்த ஆசிய நடிகைக்கான விருதை வெல்வாரா ராஷ்மிகா?

சிறந்த ஆசிய நடிகைக்கான சர்வதேச விருதிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா

சிறந்த ஆசிய நடிகைக்கான செப்டிமியஸ் விருதுக்கு தேர்வாகி இருக்கிறார் புஷ்பா பட  கதாநாயகி ராஷ்மிகா மந்தனா.

ராஷ்மிகா மந்தனா

கன்னடத்தில் கிரிக் பார்ட்டி என்கிற படத்தின் மூலமாக கதநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷ்மிக மந்தனா. தொடர்ந்து கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவுடன் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இருவரும் இணைந்து நடித்த டியர் காம்ரேட் படம் மிக குறைந்த காலத்தில் அதிக ரசிகர்களை பெற்ற நடிகையாக மாறினார் ராஷ்மிகா. கன்னட தெலுங்கு சினிமாவின் நடித்து  புகழ்பெற்ற ராஷ்மிகா, கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். பின் வாரிசு திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக உருவாகி இருக்கிறார். தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடித்து உருவாகி வரும் அனிமல் படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் தடம் பதிக்க இருக்கிறார் ராஷ்மிகா

ஸ்ரீவல்லி

புஷ்பா படத்தில் ராஷ்மிகா நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரம் இந்தியளவில் மட்டுமில்லாமல் உலகளவில் ட்ரெண்டானது. இந்நிலையில் வருடந்தோறும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்படம் விருது விழாவான செப்டிமியஸ் விருதிற்கு சிறந்த ஆசிய நடிகையின் பிரிவினுள் தேர்வாகி இருக்கிறார் நடிகை ராஷ்மிகா. இந்த தகவலை தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட அவர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சிறந்த ஆசிய நடிகருக்கான விருதிற்கு மலையாள நடிகர் டோவினோ தாமஸ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த இந்த ஆண்டு வெளியான 2018 என்கிற படத்திற்காக இந்த விருதிற்கு தேர்வாகி இருக்கிறார் டோவினோ தாமஸ்.

டோவினோ தாமஸ்

வெளிவரவிருக்கும் படங்கள்

தற்போது டோவினோ தாமஸ் நடிகர் திலகம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஹனி பீ ஆகிய படங்களை இயக்கிய லால் ஜூனியர் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டாரான டேவிட் படிக்கல்லின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து டொவினோ தாமஸ் ஏ.ஆர்.எம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். டொவினோ தாமஸின்  முதல் பான் இந்தியத் திரைப்படமாக இது இருக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ் 1900, 1950, 1990 என மூன்று காலங்களைச் சேர்ந்த மூன்று கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து பாசில் ஜோசப் இயக்கத்தில் வெளிவந்து கவனமீர்த்த மின்னல் முரளி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார்.

ராஷ்மிகா லைன் அப்

தற்போது நடித்து  நடித்து சேகர் கம்முலா இயக்க இருக்கும் டி 51 படத்தில் நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் அர்ஜுன் ரெட்டி இயக்குநர் ரன்பீர் கபூரை இயக்கும் அனிமல் படத்தில் நடித்துள்ளார்.  ரசிகர்கள் அனைவரும் மிக ஆர்வமாக எதிர்பார்த்து வரும் புஷ்பா 2 இரண்டாம் பாகத்தில் அதே ஸ்ரீவல்லியாகவும் விரைவில் தோன்ற இருக்கிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
Embed widget