மேலும் அறிய

Pushpa 2 Collection: இதுதான் பெஞ்ச் மார்க்..! 2 நாள் மொத்த வசூல், புதிய சரித்திரம் படைத்த புஷ்பா 2 - உடைக்க யாரால் முடியும்?

Pushpa 2 Day 2 Collection: புஷ்பா 2 திரைப்படம் முதல் 2 நாட்களிலேயே உலக அளவில் ரூ.400 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Pushpa 2 Day 2 Collection:  புஷ்பா 2 திரைப்படம் முதல் 2 நாட்களின் வசூல், முன்னெப்போதும் எந்த இந்திய படத்திற்கும் கிடைக்காத வரவேற்பை வெளிக்காட்டியுள்ளது.

ரூ.400 கோடி வசூலித்த புஷ்பா 2

பிரமாண்டமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படம் உலகளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது. விமர்சனங்கள் கலவையாக அமைந்தாலும், ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக வசூலில் முன்பு இருந்த பல சாதனைகளை அடித்து துவைத்து வருகிறது. குறிப்பாக கடந்த 5ம் தேதி வெளியான இப்படம்,  இந்தியாவில் மட்டும் 164 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இந்த படம் முதல் நாளில் மட்டுமே 294 கோடி ரூபாய் வசூலித்ததாக புஷ்பா படத்தை தயாரித்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி,  வெளிநாட்டில் மட்டும் புஷ்பா 2 திரைப்படம் முதல்நாளில் சுமார் 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது நாளில் அப்படத்தின் மொத்த வசூல் 400 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

”புஷ்பா 2” 2வது நாள் வசூல் நிலவரம்:

சாக்னிக் இணைதள தரவுகளின்படி, புஷ்பா 2 திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 90 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதில், தெலுங்கு மார்க்கெட்டில் ரூ.27.1 கோடி, இந்தி மார்க்கெட்டில் ரூ.55 கோடி, தமிழ் மார்க்கெட்டில் ரூ.5.5 கோடி, கன்னட மார்கெட்டில் 0.6 கோடி மற்றும் மலையாள மார்கெட்டில் ரூ.1.9 கோடி அடங்கும். இன்னும் பல சிறிய திரையரங்குகளில் நேரடி டிக்கெட் விற்பனையும் தொடர்கிறது. எனவே அதையும் கருத்தில் கொண்டால், இரண்டாவது நாளிலும் இந்தியாவில் மட்டுமே புஷ்பா 2 திரைப்படம் 100 கோடி வசூலித்து இருக்கும் என நம்பப்படுகிறது. அதுபோக, வெளிநாட்டு வசூலை முதல் நாளை காட்டிலும், பாதியளவிற்கு கருத்தில் கொண்டாலே குறைந்தது 65 கோடி ரூபாய் வசூலாகி இருக்கும். அதன்படி, இரண்டாவது நாளின் முடிவில் புஷ்பா 2 திரைப்படம் மொத்தமாக, சுமார் 460 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது. 

தொடரும் வசூல் வேட்டை:

வார இறுதிநாட்களை தொடர்ந்து, புஷ்பா 2 படத்தின் வசூல் மேலும் சில நூறு கோடிகள் அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் வடநாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு புஷ்பா 2 வசூல் வேட்டை நடத்த வாய்ப்புள்ளது. இதனால், நடப்பாண்டில் அதிக வசூல் ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற சாதனையை கூட இந்த திரைப்படம் படைக்க அதிக வாய்ப்புள்ளது.

சுகுமார் இயக்கிய இப்படத்தில், சிவப்பு சந்தனக் கடத்தல்காரரான புஷ்பா ராஜ் (அல்லு அர்ஜுன்) பல சவால்களை கடந்து செல்லும் கதையைத் தொடர்கிறது. ஃபஹத் பாசில் அச்சுறுத்தும் எஸ்பி பன்வர் சிங் ஷெகாவத் ஆக மீண்டும் தோன்றியுள்ளார். ராஷ்மிகா மந்தனா முதல் பாகத்தில் வந்த ஸ்ரீவல்லியாக நடிக்கிறார். கூடுதலாக ஜெகபதி பாபு இணைந்துள்ள சூழலில், தேவி ஸ்ரீபிரசாத் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சாம் சி.எஸ்., பின்னணி இசையமைத்துள்ளது.

முதல் பாகமான புஷ்பா: தி ரைஸ், 2021 இல் கொரோனா சூழலில் வெளியானது. இது உலகளவில் ரூ.326.6 கோடி வசூல் செய்தது. மேலும் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதையும் பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி இரண்டாக உடையும் விசிக! குட்டையை குழப்பும் ஆதவ்.. கடுப்பில் விசிக சீனியர்ஸ்Nainar Joins ADMK: அதிமுகவுக்கு கிரீன் சிக்னல்.. மதில் மேல் நயினார் நாகேந்திரன்! பதற்றத்தில் அண்ணாமலை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Embed widget