Pushpa 2 Leaked : அதுக்குள்ளவா! தமிழ்ராக்கர்ஸில் வெளியான புஷ்பா 2.. அதிர்ச்சியில் படக்குழு!
Pushpa 2 Leaked Online:- சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் புஷ்பா 2 திரைப்படம் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் புஷ்பா 2 திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சிகள் நேற்று இரவே வெளியான நிலையில் படமானது சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
புஷ்பா 2 :
அல்லு அர்ஜுனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் புஷ்பா 2 தி ரூல் இறுதியாக இன்று (டிசம்பர் 5) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், ஃபகத் ஃபாசில், சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கூடுதல் பிண்ணனி இசையை இசை அமைப்பாளர் சாம் சி.எஸ் அமைத்துப் கொடுத்துள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் இந்த படத்திற்காக அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி இருந்தார்.
ஆன்லைனில் வெளியான புஷ்பா2:
பொதுவாகவே புது திரைப்படங்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது தமிழ் ராக்கர்ஸ் வலைதளம் தான். இதற்காக படத்தை வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் வரை சென்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்திற்கு தடை விதிக்கும், ஆனால் எப்படி இருந்தாலும் படம் வெளியான நாள அன்று சட்டவிரோதமாக எப்படியோ பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்ப்படுவதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் படத்தின் சிறப்பு காட்சிகள் நேற்று வெளியான நிலையாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையில் படம் வெளியாகி சில மணி நேரங்களில் புஷ்பா 2 படமானது சட்ட விரோதமாக தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் படமான சட்டவிரோத தளங்களில் ஆன்லைனில் கசிந்தது. Filmyzilla, Movierulez, Telegram, Tamilrockerz போன்ற பல்வேறு டொரண்ட் தளங்களில் இந்த திரைப்படம் இலவசமாக HD பதிவிறக்கத்திற்கு கிடைக்கிறது, இது 1080p, 720p, 480p, 360p, 240p, HD இல் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. இதனால் படத்தை தயாரித்த பட நிறுவனம் அதிர்ச்சியில் உள்ளது.