Thunivu update: உடைக்கப்பட்ட பூசணி... ஹிப் ஹாப் ஆதி குரலில் பாடல்...துணிவு படத்தின் புதிய அப்டேட்!
அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்தின் பிரமோஷன் பாடலின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தை வைத்து, நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச். வினோத். வெகு சில படங்களே இயக்கியிருந்தாலும், மக்களின் மனங்களில் பதியும் அளவிற்கு அவர் கதைகளை எடுத்துள்ளார். அஜித்தை வைத்து இவர் தற்போது இயக்கி இருக்கும் படம் துணிவு. இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மலையாள நடிகை மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கோக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பொங்கல் ரிலீஸ்:
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு படமும், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படமும் இந்த வருட பொங்களுக்கு மோத காத்து இருக்கிறது. விஜய்-அஜித்தின் படங்கள், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாவதால், சினிமா ரசிகர்கள் “என்ன நடக்க காத்திருக்கோ..” என ஆவலுடன் உள்ளனர்.
ஹெச். வினோத்-அஜித் கூட்டணியில் முன்னதாக உருவான வலிமை படம் குறித்த தகல்களுக்காக ரசிகர்கள் நெடுநாட்களாக காத்திருக்க வேண்டிய நிலை வந்தது. படக்குழு, படக்குழுவினரை சார்ந்தவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒருவரையும் விடாமால், “வலிமை அப்டேட்..வலிமை அப்டேட்” என ரசிகர்கள் நச்சரித்தனர்.
View this post on Instagram
அப்போது செய்தது போன்ற தவறை, மறுபடியும் ரிபீட் செய்யக்கூடாது என முடிவெடுத்துள்ள துணிவு படக்குழு, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. அது மட்டுமன்றி, படம் குறித்த செய்திகளையும் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தை கலக்கிய நிலையில், அண்மையில் மஞ்சு வாரியர் மற்றும் இதர படக்குழுவினர் டப்பிங் பணிகளில் ஈடுபடும் போட்டோக்கள் வெளியாகி இருந்தன.
புதிய அப்டேட்:
#Thunivu - There's a Promotional song in the film which might come at end credits🔥 Shoot Completed yesterday✌️
— Laxmi Kanth (@iammoviebuff007) November 10, 2022
Sung by HipHop Aadhi & the song is called "Kaasedhan kadavulappa" with Rap & AK's Dialogues🔥
Ft., #AjithKumar , Manju Warrier & the rest of the cast in Black❤️🔥
இந்நிலையில் அஜித்தின் துணிவு திரைப்படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.துணிவு திரைப்படத்தின் ப்ரோமோஷனல் பாடலாக ஹிப் ஹாப் ஆதி குரலில் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் முடிவில் பெயர்கள் திரையிடப்படும் போது இந்த பாடல் திரையில் வரும் என்று கூறப்படுகிறது. இந்த பாடலின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்ததாகக் கூறப்படுகிறது.
#Thunivu Kutty Exclusive ⭐:
— Laxmi Kanth (@iammoviebuff007) November 10, 2022
Promotional Song Lyrics -
" Kaasedhan Kadavulappa.. Andha Kadavulum ippo paduthudhappa..🔥"
A HipHop Thamizha Rap with #AjithKumar's Dialogues in between..❤️🔥 Maja Song Loading..🎉
"காசேதான் கடவுளப்பா அந்த கடவுளும் இப்போ படுத்துதப்பா" என்ற இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடியுள்ளார். பாடலின் இடையே அஜித்குமாரின் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் இந்த பிரமோஷனல் பாடலின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.