‛பொற்காலம் படத்தின் தேசிய விருதை கெடுத்தவர் சரோஜா தேவி...’ - தயாரிப்பாளர் வி.ஞானவேல் வருத்தம்!
கேரவன் இல்லாத காலக்கட்டத்தில் , மைசூர் பகுதியில் எடுக்கப்பட்ட பொற்கால திரைப்பட நடிகர்கள் அனைவரும் குடிசையில் தங்கியுள்ளனர்
1997 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளியான பொற்காலம் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் . அந்த படத்தை வி,ஞானவேல் தயாரித்திருந்தார். அந்த படம் உருவான விதம் குறித்து நடிகர் சித்ரா லக்ஷ்மணனுடன் அவர் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாரதி கண்ணம்மா என்னும் திரைப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் ஞானவேல் . கிளைமேக்ஸை கண்டு அசந்து போனதாக கூறுகிறார். அந்த படத்தை நாம் தயாரித்தால் எப்படி இருக்கும். இந்த படத்தின் இயக்குநர் யார் என கேட்க, சேரன் என கூறியிருக்கின்றனர். அவரை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றவர், அந்த நேரம் வசதி படைத்த ஒரு சிலரிடம் மட்டுமே மொபைல் இருந்த நிலையில் , என்னிடம் இருந்தது சேரனிடம் மொபைல் இல்லை என்கிறார் ஞானவேல் .
இப்படியான சூழலில் ஒருமுறை எங்கோ சென்ற சேரனை வழியில் மடக்கி , அவரிடம் உங்கள் படத்தை பார்த்தேன்..இப்படியான படம் எனக்கு செய்துக்கொடுங்கள் என கேட்டிருக்கிறார் ஞானவேல். “உடனே சேரன் சரி என கூற , சம்பளம் பேசினோம். நாங்கள் சேரனுக்கு 15 லட்சம் வரை கொடுக்க இலக்காக வைத்திருந்தோம் ஆனால் அவர் எங்களிடம் 10 லட்சம்தான் கேட்டார். நாங்கள் பின்னர் குறைத்து 8.5 லட்சத்திற்கு முடித்தோம். அதிக சம்பளம் கேட்கவில்லை. மிகவும் எளிமையான மனிதர். இதுநாள் வரையிலும் அவர் அப்படித்தான்” என பெருமையாக கூறுகிறார் தயாரிப்பாளர் வி.ஞானவேல் . முதலில் சேரன் சொல்லிய கதை தனக்கு பிடிக்கவில்லை என்றும் பிறகு மண்குதிரை என்ற தலைப்பில் சொன்ன கதை மிகவும் பிடித்துப்போனது என கூறிய தயாரிப்பாளர் , படத்தின் தலைப்பை மாற்ற சொல்லியிருக்கிறார். அப்படி உருவான பெயர்தான் பொற்காலம்.
சமையல் உருவாகும் பொழுதே அது எப்படி இருக்கும் என தெரிந்துவிடும் என்பார்களே ..அதுபோலத்தான் பொற்காலம் திரைப்படம் உருவாகும் பொழுதே அந்த படம் மாபெரும் ஹிட் என்பது எனக்கு தெரிந்தது என்கிறார் தயாரிப்பாளர். கேரவன் இல்லாத காலக்கட்டத்தில் , மைசூர் பகுதியில் எடுக்கப்பட்ட பொற்கால திரைப்பட நடிகர்கள் அனைவரும் குடிசையில் தங்கினார்கள். குறிப்பாக குயவனாக நடித்த நடிகர் மணிவண்ணன் அங்குள்ள திண்ணை ஒன்றில் படுத்து தூங்குவார் என்கிறார் ஞானவேல் பெருமிதமாக. சேரன் மிகுந்த ஈடுபாட்டுடன் , 46 நாட்களில் படத்தை முடித்தார். ஆனால் எங்களுக்கான அனுபவத்தில் அந்த படத்திற்கு தேசிய விருது பெற்றுத்தர முடியவில்லை. படத்தை நாங்கள் தேசிய விருதிற்கு அனுப்பினோம். ஆனால் சில பிழைகளை செய்துவிட்டோம், ஜூரியில் தமிழ்நாடு சார்பில் சரோஜா தேவி இருந்ததால் அவர் கன்னட படத்திற்கு விருதை கொடுத்தாக வருந்துகிறார் ஞானவேல்.