சஸ்பென்ஸ் விஷயம்... குழம்பிய ரசிகர்கள்... போஸ்ட் மூலம் விடையளித்த பிரியங்கா சோப்ரா!
Priyanka Chopra : 26.8.22 என்ற தேதியை வைத்து ஒரு சஸ்பென்ஸ் வைத்த பிரியங்கா சோப்ரா ட்ரொபோது அதை வெளியிட்டுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.

Priyanka Chopra : சஸ்பென்ஸை உடைத்த பிரியங்கா சோப்ரா... 26.8.22 குறித்த அப்டேட் உள்ளே...
பாலிவுட்டின் பிரபலமான நடிகையும் தற்போது ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் உலக அழகி பிரியங்கா சோப்ரா சில தினங்களுக்கு முன்னர் தந்து ட்விட்டர் பக்கத்திற்கு நம்மை அழைத்து சென்று அங்கே பனி படிந்த ஒரு கண்ணாடியின் முன் நின்று அதில் 26.8.22 என்று தேதியை குறிப்பிட்டு கீழே ஒரு ஹார்ட் ஸ்மைலியையும் வரைந்து காட்டி காத்திருங்கள் என்ற ஒரு சஸ்பென்ஸ் போஸ்ட் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
காரணம் என்னவாக இருக்கும்?
இதற்கான சரியான காரணம் தெரியாமல் முழித்து கொண்டு இருந்த அவரது பின்பற்றாளர்கள் பலவற்றை அவர்களாகவே யூகித்து கொண்டனர். அது திருமணம் பற்றிய தகவலாக இருக்குமோ என்ற யூகங்களும் இருந்தன. தற்போது அந்த முடிச்சு அவிழ்த்து விட்டு இருக்கிறார் பிரியங்கா சோப்ரா.

பிரியங்கவின் முடி பராமரிப்பு பிராடக்ட்:
பாலிவுட் நட்சத்திரம் தனது சொந்த வரிசையில் அனோமாலி பிராடக்ட்ஸ் என்ற பெயரில் முடி பராமரிப்பிற்கான மூன்று வகையான ஷாம்பு, மூன்று வகை கண்டிஷனர் மற்றும் ட்ரை ஷாம்பு வகைகள் மற்றும் முகத்திற்கான மாஸ்க் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இவை எந்த ஒரு கலப்படமும் இல்லாத சுத்தமான சைவ பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இவை அனைவராலும் ஏற்க கூடிய விலைகளில் இருப்பது இதன்.
அனோமாலி பிராடக்ட்ஸ் இந்தியாவில் அறிமுகம்:
இது வரையில் ஆன்லைனில் மட்டுமே கிடைத்து வந்த இந்த அனோமாலி பிராடக்ட்ஸ் தற்போது நமது இந்தியாவில் விற்பனைக்கு தயாராகியுள்ளது. இதற்காக பிரியங்கா சோப்ரா நைக்கா எனும் ஆன்லைன் ஸ்டோர் உடன் பார்ட்னராக கைகோர்த்துள்ளார். அதனால் இனிமேல் அவரது அனோமாலி பிராடக்ட்ஸ் நைக்கா ஆன்லைன் ஸ்டோர் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். இது வரும் 26.8.22 முதல் இந்தியா முழுவதிலும் நைக்கா ஆன்லைன் ஸ்டோர் மூலம் கிடைக்கக்கூடும். நிச்சயமாக அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.
கலப்படம் இல்லாத சுத்தமான தயாரிப்பு:
மேலும் அவர் கூறுகையில் அனைத்து முடி வகைகளுக்கும் ஏற்றவகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பிராடக்ட்ஸ் ஸ்கேல்ப் கேர், பிரெஷ் ஹேர் கேர், கண்டிஷனர் என பல முடி பராமரிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களும் இதில் கிடைக்கின்றன. இவை சுத்தமான சுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களில் வருகின்றன. இவற்றை பயன்படுவதன் மூலம் உங்கள் முடிக்கு சிறப்பான தோற்றத்தை கொடுக்க முடியும். இதில் சல்பேட், பாராபென், மினெரல் ஆயில் என எந்த ஒரு கலப்படமும் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் இது எந்த ஒரு கெடுதலையும் ஏற்படுத்தாது என்று உறுதியளிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
with the traditions of a strong haircare routine that was instilled in me. We’ve combined that understanding with our clean, superior formulas that will give you your best hair yet.
— PRIYANKA (@priyankachopra) August 18, 2022
(2/3)
Available exclusively on @MyNykaa and Nykaa stores across the country from August 26th 2022…. I can’t wait for you to experience Anomaly.
— PRIYANKA (@priyankachopra) August 18, 2022
(3/3)
இந்த அறிவிப்பை ஒரு வீடியோ பதிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா. அந்த வீடியோ இதோ உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.





















