Priyanka Chopra : முதன்முதலாக மகளின் முகத்தை காட்டிய பிரியங்கா சோப்ரா...இணையத்தை கலக்கும் க்யூட் புகைப்படங்கள்..
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது மகள் மால்தி மேரி முகத்தை வெளி உலகத்திற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Priyanka Chopra : பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது மகளின் முகத்தை வெளி உலகத்திற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
பிரியங்கா சோப்ரா
பாலிவுட் நடிகையான பிரியங்கா தமிழ் சினிமாவில்தான் முதன் முதலாக அறிமுகமானார். நடிகர் விஜய்யுடன் தமிழன் திரைப்படத்தில் நடித்த பிறகு பாலிவுட் படங்களில் அதிக வாய்ப்புகள் வர தொடங்கியது. பின்னர் ஹாலிவுட் படங்களிலும் கூட நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவின் பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனஸை காதலித்து 2018-ஆம் ஆண்டு இந்து மற்றும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர். தன்னை விட வயது குறைந்தவரை பிரியங்கா திருமணம் செய்து கொண்டதால் அவர் அதிகமான விமர்சனம் செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து கடந்த ஆண்டு துவக்கத்தில் வாடகை தாய் மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றுக் கொண்டனர். மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் என அந்த குழந்தைக்கு பெயர் வைத்தனர். குழந்தை பிறந்து கடந்த ஒரு ஆண்டாக அவரது முகத்தை காட்டாமல் மறைத்து வந்த நிலையில், தற்போது தனது மகளான மால்தி மேரி சோப்ரா ஜோனஸ் முகத்தை உலகிற்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
View this post on Instagram
மகளின் முகத்தை காட்டிய பிரியங்கா
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்ட பிறகும் ஒராண்டாக குழந்தையின் முகத்தை காட்டாமல் இருந்துள்ளார். என்னதான் அவ்வப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட க்யூட் புகைப்படத்தை பிரியங்கா வெளியிட்டாலும் கூட மால்தியின் முகம் தெரியும் புகைப்படத்தை வெளியிடவே இல்லை. ஆனால் தற்போது தனது மகளின் முகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
Priyanka Chopra Reveals Daughter's Face To The World#PriyankaChopra #MaltiMarie #NickJonas #picoftheday pic.twitter.com/C5Eoo81Z9R
— Varsha (@VarshaIIMC) January 31, 2023
நிக் ஜோனஸ் சகோதரர்கள் தொடர்பான நிகழ்ச்சியில் தனது குழந்தையோடு பிரியங்கா சோப்ரா வந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் நிக் ஜோனஸ் சகோதரர்களான கெவின் மற்றும் ஜோ கலந்து கொண்டனர். பிரியங்கா சோப்ராவின் மடியில் அவரது குழந்தை மால்தி உட்கார்ந்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
Vani Jairam: பத்ம பூஷண் விருது அறிவிப்பு ... மத்திய அரசுக்கு பாட்டு பாடி நன்றி சொன்ன வாணி ஜெயராம்..!





















