Prince - Sardar USA Release today : இன்று மாலையே வெளியாகும் சர்தார் - பிரின்ஸ் படங்கள்... பாக்ஸ் ஆபீஸில் வெல்ல போவது யார்?
இன்று மாலை அமெரிக்காவில் கார்த்தியின் "சர்தார்" மற்றும் சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" வெளியாகிறது .
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் இருவருமே அனைவருக்கும் பிடித்த ஃபேவரைட் ஹீரோக்கள் என்பதை யாருமே மறுக்க முடியாது. நடிகர் கார்த்தியின் "சர்தார்" மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் "பிரின்ஸ்" திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 21ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
புத்திசாலித்தனமா ஹீரோஸ் :
இந்த தீபாவளிக்கு இந்த இரண்டு ஹீரோக்களின் படங்களும் ரிலீஸாவது ரசிகர்கள் மத்தியில் லேசான சலனத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஹீரோக்கள் இருவருமே மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். இரண்டு படங்களுமே வெவ்வேறு ஜானார் திரைப்படம். அனைத்து ரசிகர்களும் இரண்டு படங்களுக்கும் ஆதரவை தர வேண்டும் என இருவருமே படத்தின் புரொமோஷன் சமயத்தில் கேட்டு கொண்டுள்ளனர்.
Diwali Releases:#Sardar Vs #Prince#NaaisekarReturns ** pic.twitter.com/Ii944U3fRs
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 7, 2022
அமெரிக்காவில் இன்று மாலை ரிலீஸ்:
இந்தியாவிலும் பிறநாடுகளிலும் தீபாவளி ரிலீஸாக இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நாளை வெளியாக உள்ளது. ஆனால் அக்டோபர் 20ம் தேதியான இன்று மாலை அமெரிக்காவில் பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படம் வெளியாகிறது. அமெரிக்க நேரத்தின் படி மாலை 7.30 மணியளவில் வெளியாகிறது பிரின்ஸ் மற்றும் சர்தார் திரைப்படம். இந்திய நேரப்படி அது காலை 5 மணி ஆகும். எனவே அக்டோபர் 21ம் தேதி (வெள்ளிக்கிழமை) வெளியாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படம் இரண்டுமே அமெரிக்காவில் முந்தைய நாளான இன்று மாலையே வெளியாகிறது.
#Sardar and #Prince USA Premiers from today evening.
— Christopher Kanagaraj (@Chrissuccess) October 20, 2022
As I will be travelling out of town, Will NOT be able to watch both films premiere.😌
Hope both films will be gud and gain success!
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஸ்பை ஜனார் திரைப்படம் "சர்தார்". தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் "பிரின்ஸ்".
கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான "விருமன்" மற்றும் "பொன்னியின் செல்வன் 1" திரைப்படம் இரண்டுமே சூப்பர் ஹிட் வெற்றி படங்களாக அமைந்தன. அதனை தொடந்து மூன்றாவதாக சர்தார் திரைப்படம் நாளை வெளியாகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான டான் திரைப்படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடந்து "பிரின்ஸ்" திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.