அரசியல் புரிதல் சுத்தமா இல்ல...விஜய் பவன் கள்யாணை பொளந்து கட்டிய பிரகாஷ் ராஜ்
நடிகர் விஜய் மற்றும் பவண் கல்யாண் ஆகிய இருவருக்கும் பிரச்சனைகள் குறித்தான தெளிவு இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்

விஜய் பற்றி பிரகாஷ் ராஜ்
நடிகர் விஜய் பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. " விஜய் மற்று பவண் கல்யாண் ஆகிய இருவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். என்னுடைய இருபது வருட பயணத்தில் ஒருமுறை கூட நான் இவர்களிடம் அரசியல் பேசியதில்லை. இருவரும் தங்களுக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதர்வை வைத்து அரசியலுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் இருவரிடமும் தற்கால பிரச்சனைகள் குறித்து எந்த வித தெளிவும் இல்லை" என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
"In these 20 years, I never had a serious discussion about politics with Both #PawanKalyan #ThalapathyVijay. They are actors, because of their popularity, they entered politics, but I haven’t seen a clear vision or understanding of issues from either of them."
— Whynot Cinemas (@whynotcinemass_) May 4, 2025
- #PrakashRaj |… pic.twitter.com/M9T9AnwwaS
தமிழக வெற்றிக் கழகம்
கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக உலா வரும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள நிலையில் அவர் கடந்தாண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினர். அவர் கட்சி தொடங்கியது முதலே பரபரப்பான சூழல் இருந்து வரும் நிலையில் அவர் தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.கட்சி தொடங்கிய பிறகு முதன்முதலில் விக்கிரவாண்டி அரசியல் மாநாட்டில் பேசிய பிறகு பரந்தூரில் போராடும் மக்களைச் சந்தித்தார். அதன்பின்பு கோயம்புத்தூரில் தனது கட்சி பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றார். இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் சென்று தனது பிரச்சார வாகனம் மூலமாக கொடைக்கானலுக்கு ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார்.





















