Prakash Raj: சந்திரயான், நில ஆக்கிரமிப்பு என சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் சொன்ன உண்மை..
சந்திரயான் -3, நில ஆக்கிரமிப்பு என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்
![Prakash Raj: சந்திரயான், நில ஆக்கிரமிப்பு என சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் சொன்ன உண்மை.. Prakash Raj again lands in controversy revenue department shares statement Prakash Raj: சந்திரயான், நில ஆக்கிரமிப்பு என சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்.. அதிகாரிகள் சொன்ன உண்மை..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/25/a3bd55eaeaa0116dd984e8a2e21b15351692963240045102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கொடைக்கானலில் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை என அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனக்கு சொந்தமான ஏழு ஏக்கர் நிலத்துடன் சேர்த்து சதுப்பு நிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் எழுந்தன. பேத்துப்பாறை பகுதியில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நிலம் வாங்கி வீடு கட்டியுள்ளனர். இந்த நிலையில் கடந்த 21ம் தேதி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளின் குறைதீர் கூட்டத்தில், பேசிய விவசாயிகள் நடிகர் பிரகாஷ் ராஜ் பேத்துப்பாறை அஞ்சுவீடு பகுதியில் கட்டிடம் ஒன்று கட்டி வருவதாகவும், அந்த வீட்டிற்கு செல்ல பொதுப்பாதையை ஆக்கிரமித்து சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகவும், பிரகாஷ் ராஜ் தனக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலத்துடன், சதுப்பு நிலத்தையும் ஆக்கிரமித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
புகாரை தொடர்ந்து நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை என வருமானவரித்துறை சார்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், பிரகாஷ் ராஜ் ஆக்கிரமித்ததாக கூறப்படும் சாலையை பொதுமக்கள் பயன்படுத்த எந்த தடையும் இல்லை என கூறப்பட்டுள்ளது. இதேபோன்று, நடிகர் பாபி சிம்ஹா மலைப்பகுதியில் 3 மாடி கட்டிடம் கட்டு வருவதால் விவசாயிகளுக்கு செல்ல வழியில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நில ஆக்கிரமிப்பு மட்டும் இல்லாமல், இந்திய விஞ்ஞானிகளையும் பிரகாஷ் ராஜ் விமர்சித்ததால் சர்ச்சையில் சிக்கினார். இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ நிலவின் தென் துருவ பகுதியில் சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதற்கிடையே, சந்திராயன் திட்டம் குறித்து விமர்சிக்கும் விதமாக பிரகாஷ் ராஜ் பகிர்ந்த டிவிட்டர் பதிவு ஒன்று சர்ச்சையானது. அதில், ‘ நிலவில் இருந்து விகர்ம் லேண்டர் அனுப்பிய முதல் புகைப்படம்’ என பதிவிட்டு டீ ஆற்றும் கார்ட்டூன் பொம்மையை பதிவிட்டிருந்தார்.
BREAKING NEWS:-
— Prakash Raj (@prakashraaj) August 20, 2023
First picture coming from the Moon by #VikramLander Wowww #justasking pic.twitter.com/RNy7zmSp3G
பிரகாஷ் ராஜியின் இந்த பதிவுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அவருக்கு எதிராக புகார்களும் அளிக்கப்பட்டன. தொடர்ந்து மத்திய அரசை விமர்சிப்பதாக சர்ச்சையில் சிக்கி வருகிறார் பிரகாஷ் ராஜ்.
மேலும் படிக்க: Adiyae Movie Review: ‘என்னங்க படம் இது’ .. டைம் டிராவலில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்.. ‘அடியே’ பட விமர்சனம் இதோ..!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)