Salaar Trailer: கேஜிஎஃப் ரசிகர்கள் அடுத்த சம்பவத்துக்கு தயாராகுங்க.. பிரபாஸின் ‘சலார்’ ட்ரெய்லர் ரிலீஸ் தேதி இதுதான்!
பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சலார்
‘சலார்’. கேஜிஎஃப் பாகங்களை இயக்கி கன்னட சினிமாவை தாண்டி ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் ஈர்த்தவர் பிரஷாந்த் நீல். கன்னட சினிமாவின் மார்க்கெட்டையே அடுத்த தளத்துக்கு உயர்த்திய பிரஷாந்த் நீலின் அடுத்த படமான சலாரை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர். கேஜிஎஃப் பாகங்களைத் தொடர்ந்து மிகப்பெரும் பொருட்செலவில் இப்படம் உருவாகி வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைத்து டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் மலையாள நடிகர் பிருத்விராஜ் வில்லனாக நடிக்க, நடிகை ஸ்ருதி ஹாசன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெகபதி பாபு முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சலார் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற டிசம்பர் 1 ஆம் தேதி சலார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இதனால் கேஜிஎஃப் மற்றும் பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் காணப்படுகிறார்கள்.
சலார் அப்டேட்ஸ்
சலார் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ப்ரித்விராஜின் ஃபர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்தநாளன்று படக்குழு வெளியிட்டது.
Wishing ‘𝐕𝐚𝐫𝐝𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 𝐌𝐚𝐧𝐧𝐚𝐚𝐫’ 𝗧𝗛𝗘 𝗞𝗜𝗡𝗚 @PrithviOfficial, a majestic birthday.#HBDVardharajaMannaar #HBDPrithvirajSukumaran#SalaarCeaseFire #Salaar @SalaarTheSaga #SalaarCeaseFireOnDec22 pic.twitter.com/y26Tt67SFA
— Prithviraj Productions (@PrithvirajProd) October 16, 2023
இதனைத் தொடர்ந்து சலார் படத்தில் ரிலீஸ் தேதியில் ஒரு சில மாற்றங்கள் செய்யப் பட்டதைத் தொடர்ந்து
பிரபாஸ் நடித்து வரும் படங்கள்
பிரபாஸ் நடித்து கடைசியாக வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் தற்போது சலார் மற்றும் இன்னும் சில படங்களை நம்பி இருக்கிறார்கள் ரசிகர்கள். அதில் தற்போது பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 படமும் ஒன்று. ‘மகாநடி’ படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான கமல்ஹாசன், அமிதாப் பச்சன் ஆகியோர் நீண்ட நாள்களுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. இந்திய புராணக் கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்து வருகிறார். சுமார் 600 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இந்தப் படம் பிரபாஸின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று அனைவரு எதிர்பார்த்து வருகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

