Kalki 2898 : இணையத்தில் வெளியான பிரபாஸின் கல்கி பட டீசர்.. வாளேந்தி மாஸ் காட்டும் பிரபாஸ்..
பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 படத்தின் டீசர் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது
பிரபாஸ்
ஆதிபுருஷ் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து தற்போது சலார் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். பிரஷாந்த் நீல இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் , ப்ரித்விராஜ் சுகுமாறன், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படம் இரு வாரத்திற்குள்ளாக 500 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது பிரபாஸ் நடித்து வரும் கல்கி 2898 படத்தின் டீசர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
கல்கி 2898
இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கி பிரபாஸ், ரானா டகுபதி , கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் நடித்து வரும் திரைப்படம் கல்கி 2898. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் சுமார் 600 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படுகிறது. மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வைஜயந்தி மூவீஸ் இந்தப் படத்தை தயாரிக்கு சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இணையத்தில் பரவிய போஸ்டர்கள்
#Prabhas ragane ah response 🔥🔥🔥🔥
— 𝙎𝙪𝙢𝙖𝙣𝙩𝙝 𝙑𝙖𝙧𝙢𝙖 (@Sumanth__Varma) December 29, 2023
#Kalki2898AD teaser played at at TECH FEST’23, IIT Bombay@iitbombay @Techfest_IITB@VyjayanthiFilms @Kalki2898AD pic.twitter.com/0I5anBniCM
புராணக் கதையை மையமாக வைத்து சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார் இயக்குநர் நாக் அஸ்வின் , இந்தப் படத்தின் வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவிகளுன் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு சில போஸ்டர்கள் இணையதளத்தில் கசிந்து வெளியாகின. படத்தின் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் நடைபெறும் இடத்தில் இருந்து இந்த புகைப்படங்கள் வெளியானதாக படக்குழு சார்பாக தெரிவிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் டீசரில் இருந்து சில காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி இருக்கின்றன. மும்பையில் ஐஐடி கல்லூரியில் நடைபெறு டெக்ஃபெஸ்ட் நிகழ்ச்சியில் இயக்குநர் நாக் அஸ்வின் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கல்கி படத்தில் பயன்படுத்தப் படும் தொழில்நுட்பங்கள் பற்றிய விரிவுரையை அவர் மாணவர்களுக்கு வழங்கினார், மேலும் கல்கி படத்தின் டீசர் சிறப்பு திரையிடலாக திரையிடப்பட்டது. இந்த டீசரை தங்களது செல்ஃபோனில் வீடியோ எடுத்த மாணவர்கள் இணையதளத்தில் அப்லோட் செய்துள்ளார்கள். இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.
சலார்
கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகிய சலார் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சலார் திரைப்படம் முதல் ஐந்து நாட்களில் 500 கோடிகளை உலகளவில் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.