Kalki 2898 AD Collection: ஹாலிவுட் ரேஞ்சில் வெளியான 'கல்கி 2898 AD' - இரண்டாம் நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office Collection Day 2: 'கல்கி 2898 AD' படம் உலககெங்கிலும் நேற்று வெளியான நிலையில், இப்படம் 2 நாட்களில் மிகப்பெரிய அளவில் வசூலை ஈட்டியுள்ளது.
வைஜயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியான திரைப்படம் 'கல்கி 2898 AD'. அறிவியல் புனைகதை மற்றும் புராணங்களை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அமிதாப் பச்சன் , தீபிகா படூகோன், கமல்ஹாசன், ஷோபனா, அனா பென், திஷா பதானி, பசுபதி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கல்கி:
தமிழ் , இந்தி , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய படமாக வெளியான இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரிய சைன்ஸ் ஃபிக்ஷன் படமாக 600 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதைக்களத்துடன் தொடங்குகிறது. சுப்ரீம் யாஸ்கினின் கொடுங்கோல் ஆட்சிக்கு அடிபணிந்து பசியும் பட்டினியுமாக வாழும் மக்கள் ஒரு பக்கமும் அதிகாரம், செல்வம் படைத்த மக்கள் மட்டுமே வாழும் செழிப்பான காம்பிளக்ஸ் என்ற தனி உலகில் சிலரும் வாழ்கிறார்கள். எப்படியாவது பணத்தை சேர்த்து தானும் வசதியாக அந்த காம்பிளக்ஸில் வாழ வேண்டும் என்பதே படத்தின் நாயகன் பைரவாவின் கனவு.
Kalki 2898 AD Day 1 Afternoon Occupancy: 74.84% (Telugu) (3D) #Kalki2898AD https://t.co/IT1fHnb3ID
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) June 27, 2024
யாஸ்கினின் கொடுமையில் இருந்து உலகத்தை காப்பாற்றி அமைதியை நிலைநாட்ட ஒரே நம்பிக்கை பிறக்க இருக்கும் கல்கி குழந்தை. அந்த குழந்தையை காப்பற்ற பல ஆண்டுகளாக காத்திருக்கிறார் அஸ்வத்தாமா. மறுபக்கம் அந்த குழந்தையின் மூலம் தன்னுடைய கனவை நிறைவேற்றி கொள்ள நினைக்கிறார் பைரவா. இறுதியில் யாருடைய கனவு நிறைவேறியது என்பது தான் கல்கி படத்தின் கதைக்களம். ஹாலிவுட் ரேஞ்சில் மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ள கல்கி 2898 AD திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் வெளியாகியுள்ளன.
முதல் நாளில் கல்கி 2898 AD திரைப்படம் இந்திய அளவில் ரூ.95.3 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரையில் எந்த ஒரு படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவிலும் உலகளவிலும் டிக்கெட் முன்பதிவு மட்டுமே 1 மில்லயனையும் கடந்து விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தெலுங்கில் மட்டுமே அதிகப்படியான அட்வான்ஸ் புக்கிங் நடைபெற்ற நிலையில் முதல் நாள் மேட்னி ஷோவில் 74.84% இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் உலகளவில் முதல் நாள் வசூல் 200 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளுக்கு நாள் எகிறும் வசூல்:
அதேசமயம் கல்கி 2898 ஏடி படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், இப்படம் முதல் நாளில் உலகமெங்கும் ரூ.191.5 கோடி வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில் sacnilk தளம் வெளியிட்ட அறிவிப்பில் 2 ஆம் நாளில் கல்கி படம் இந்தியாவில் ரூ.54 கோடி வசூலை ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ரூ.25.65 கோடி, தமிழில் ரூ.3.5 கோடி, இந்தியில் ரூ.22.5 கோடி, கன்னடத்தில் ரூ.35 லட்சம், மலையாளத்தில் ரூ.2 கோடி என வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.