PSPK 28 | பவர் ஸ்டார் அப்டேட் வெளியிட்ட படக்குழு - அப்செட்டான ரசிகர்கள்.

பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்துள்ள அவரது 28வது படம் குறித்த அப்டேட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது அந்த படத்தை தயாரிக்கும் மித்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்.

FOLLOW US: 

ஹரிஷ் சங்கர் என்பர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் PKPS 28. இது பிரபல நடிகர் பவன் கல்யாணின் 28வது படம் என்பது பலரும் அறிந்ததே. ஏற்கனவே இந்த படம் குறித்த சிறிய அப்டேட்டாக ஒரு போஸ்ட்டரை மித்ரி நிறுவனம் பவன் கல்யாணின் பிறந்தநாள் ஆண்டு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பவனின் ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் First look குறித்து இணையத்தில் பல கேள்விகளை முன்வைத்த நிலையில் தற்போது அதுகுறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

பிரபல நடிகர் சிரஞ்சீவியின் தம்பி தான் பவன் கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலேயே பல திறமைகளோடு திரையுலகில் கால்பதித்தார் பவன் கல்யாண். அரசியலிலும் பவன் கல்யாண் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பவன் கல்யாண் நடிகராக, ஸ்டண்ட் கலைஞராக, பாடகராக, தயாரிப்பாளராக மற்றும் டான்ஸ் மாஸ்டராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். 1996ம் ஆண்டு அக்கட அம்மாயி இக்கட அப்பாயி என்ற படம் தான் இவர் முதல் முதலாக நடிகராக அறிமுகமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள பவன் கல்யாணுக்கு தமிழ் மொழியிலும் ரசிகர்கள் உண்டு.PSPK 28 | பவர் ஸ்டார் அப்டேட் வெளியிட்ட படக்குழு - அப்செட்டான ரசிகர்கள். 

தல அஜித் நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு வெர்சனை, வக்கீல் சாப் என்ற தலைப்பில் பவன் கல்யாண் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு இந்தப்படம் வெளியானபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்து பவன் கல்யானை கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. பாடகராக, ஸ்டண்ட் கலைஞராக ஒரு தயாரிப்பாளராக கலக்கி வரும் பவன் நலிந்த கலைஞர்களுக்கு தனது உதவியை செய்யவும் மறப்பதில்லை. 

Vijay Sethupathi | மிஷ்கின் படத்தில் விஜய் சேதுபதி : புகழ்ந்து தள்ளிய வில்லன் நடிகர்!

இந்நிலையில் அவருடைய 28வது படத்தின் First look மற்றும் டைட்டில் லுக் உகாதி திருநாள் அன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது நிலவும் இக்கட்டான சூழலால் அந்த நிகழ்வு தள்ளிவைக்கப்படுகிறது என்றும். ரசிகர்கள் படத்தின் மீது காட்டும் ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் திரைப்படம் குறித்த பல போலியான தகவல்கள் இணையத்தில் வலம்வருகிறது என்றும். PSPK 28 குறித்த எல்லா தகவலும் அதிகாரப்பூர்வமாக தங்களிடம் இருந்தும் படக்குழுவிடம் இருந்தும் வந்தால் மட்டுமே அது உண்மையான தகவல் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் படத்தின் அப்டேட் தள்ளிப்போன நிலையில் அப்சட் ஆகியுள்ளனர் ரசிகர்கள்.       

Tags: pawan kalyan PSPK28 Power Star Pawan Kalyan 28 Mythiri Movie Makers

தொடர்புடைய செய்திகள்

‛சர்கார் பார்த்தாச்சு... சர்தார்  பாக்கணுமே....’ ஜூலை 10ல் மீண்டும் துவக்கம்!

‛சர்கார் பார்த்தாச்சு... சர்தார் பாக்கணுமே....’ ஜூலை 10ல் மீண்டும் துவக்கம்!

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

‛நொந்து போன எங்களை நோண்டாதீங்கடா...’ தல ரசிகர்களை வெறுப்பேற்றும் போலி வலிமை அப்டேட்!

Actor Prabhas | 150 கோடி ! பணத்துக்கு ஆசைப்படாத பாகுபலி பிரபாஸ்; திகைப்பில் முன்னணி பிராண்டுகள்..!

Actor Prabhas | 150 கோடி ! பணத்துக்கு ஆசைப்படாத பாகுபலி பிரபாஸ்; திகைப்பில் முன்னணி பிராண்டுகள்..!

VijaySethupathi | ”உங்களை நேர்ல பார்க்கணும்” : குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய மக்கள் செல்வன்..!

VijaySethupathi | ”உங்களை நேர்ல பார்க்கணும்” : குட்டி ரசிகனின் ஆசையை நிறைவேற்றிய மக்கள் செல்வன்..!

MJ Anniversary: 'JUST BEAT IT' - அன்றும், என்றும் இசைக்கும் மாபெரும் இசை கலைஞர் எம்.ஜேவின் நினைவு நாள் !

MJ Anniversary:  'JUST BEAT IT' - அன்றும், என்றும் இசைக்கும் மாபெரும் இசை கலைஞர் எம்.ஜேவின் நினைவு நாள் !

டாப் நியூஸ்

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

Sivakasi Jayalakshmi Cheating Case: ‛என்னையே ஏமாத்திட்டாங்க...’ 10 ஆண்டுகளுக்கு பின் ‛கம் பேக்’ சிவகாசி ஜெயலட்சுமி!

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

கர்ப்பமாக்கி ஏமாற்றிய வழக்கு: மாஜி அமைச்சர் மணிகண்டன் ஜாமின் மனு தள்ளுபடி

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

Girl Harassment Case: ‛கன்’னும் என்னோடது தான்... பொண்ணும் என்னோடது தான்... போக்சோ காமுகன் எஸ்.ஐ., சதீஷ் கதை!

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

கிஷோர் கே சுவாமி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு