மேலும் அறிய

Pooja Hegde: பெத்தம்மா கோயிலில் புட்டபொம்மா நடிகை...! பூஜா ஹெக்டேவிற்கு இனி வெற்றி கிட்டுமா...?

அடுத்தடுத்த தோல்வியால் மனம் தொலைந்த நடிகை பூஜா ஹெக்டே, ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான பெத்தம்மா கோயிலுக்கு சென்று பிராத்தனை செய்து விட்டு திரும்பியுள்ளார்.

டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே முதலில் அறிமுகமானது தமிழ் சினிமாவில் தான். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவின் ஜோடியாக தான் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. 

 

Pooja Hegde: பெத்தம்மா கோயிலில் புட்டபொம்மா நடிகை...! பூஜா ஹெக்டேவிற்கு இனி வெற்றி கிட்டுமா...?

 

தமிழில் ரீ என்ட்ரி :

முதல் படமே சரியாக அமையாததால் பூஜா ஹெக்டே தனது பயணத்தை டோலிவுட் பக்கம் திருப்பினார். அங்கு அவருக்கு அடுத்தடுத்து பல படங்கள் அமைந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். 32 வயதான அல்லு அர்ஜுன் உடன் "புட்ட போம்மா..." பாடலில் பூஜா போட்ட ஆட்டம் மூலம் உலகளவில் ட்ரெண்டிங் ஆனார். தொடர்ந்து மீண்டும் தமிழில் 'பீஸ்ட்' திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். மாஸ் ஹீரோ விஜய்யின் ஜோடியாக நடித்தாலும் பாடல்களை தவிர வேறு எங்கும் சொல்லுக்கும் படியான டயலாக் கூட இல்லை என்பதால் மீண்டும் பூஜாவின் மார்க்கெட் சரிந்தது. 

 

அடுத்தடுத்து தோல்வி :

தமிழில் இல்லை என்றால் என்ன டோலிவுட் இருக்கிறதே என மீண்டும் டோலிவுட் சென்ற பூஜா ஹெக்டேவிற்கு அங்கும் அடுத்தடுத்து தோல்விகளே காத்து இருந்தது. ராம் சரண் , சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஆச்சார்யா திரைப்படமும் பான் இந்திய திரைப்படமாக பிரபாஸ் ஜோடியாக நடித்த ராதே ஷ்யாம் திரைப்படமும் சொதப்பலாக நம்பிக்கை இழந்தார் பீஸ்ட் பட நடிகை.

கடந்த ஆண்டு இறுதியில் வெளியான சர்க்கஸ் திரைப்படமும் எதிர்பார்த்த அளவு எடுபடாததால் ராசியில்லா நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு சோசியல் மீடியாவில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். மனமுடைந்த பூஜா  ஹெக்டே இனி வரும் ஆண்டில் நடிக்கவிருக்கும் திரைப்படங்களாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஹைதராபாத்தில் மிகவும் பிரபலமான பெத்தம்மா கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து விட்டு திரும்பியுள்ளார். 

 

இனியாவது வெற்றி கிடைக்குமா ?

புட்ட போம்மா ஹீரோயினை கோயிலில் பார்த்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டனர். தற்போது பூஜா ஹெக்டே விஜய் தேவரகொண்டா ஜோடியாக சார்மி கவுர், பூரி ஜெகநாத், வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்தில் நடிக்க உள்ளார். இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த திரைப்படம் என்பதால் பூஜா ஸ்கோர் செய்ய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என கூறப்படுகிறது. தற்போது அவர் மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
புதுச்சேரியில் 1 முதல் 8 வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - காரணம் என்ன?
Watch Video:
Watch Video: "ஈ சாலா கப் நம்தே" - விநாயகர் சிலை முன் RCB ரசிகர் செய்த செயல்! வைரல் வீடியோ
"திமுகவின் தேவை இன்னும் 100 ஆண்டுகளுக்கு இருக்கிறது" முப்பெரும் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை!
திமுக பவள விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.. AI மிரட்டுதே!
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? -  யார் தெரியுமா..?
உடல் உறுப்பு தானம் செய்த பிரபல பைக் ரேசர் ? - யார் தெரியுமா..?
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
ஆசியாவின் “கிங்” என நிரூபித்த இந்தியா... சீனாவை தோற்கடித்து கோப்பையை வென்றது
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
டெல்லியில் புது இன்னிங்ஸ்.. முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த அரவிந்த் கெஜ்ரிவால்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
ஆஹா! பெரியார் திடலில் தவெக தலைவர்.. ஒரே விசிட்டில் செய்தி சொன்ன விஜய்!
Embed widget