மேலும் அறிய
Advertisement
Watch Video: நடிகர் ‘பூ’ ராமுவின் இறுதி ஊர்வலத்தில் பறை வாசித்த நடிகர் காளி வெங்கட்..! கொள்ளி வைத்த மகள்..!
தனது பள்ளி பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பொதுவாழ்வை தொடங்கிய இராமு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பண்பாட்டு ஊழியராக செயல்பட்டவர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினரும், நாடக, திரைப்பட கலைஞருமான பூ.இராமு சென்னையில் நேற்று (ஜூன். 27-) மாலை காலமானார். அவருக்கு வயது 60. தனது பள்ளி பருவத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பொதுவாழ்வை தொடங்கிய இராமு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்து பண்பாட்டு ஊழியராக செயல்பட்டவர். அதன் மாநிலக்குழு உறுப்பினராகவும், தேர்வு செய்யப்பட்டார்.
'பூ' ராமு இறுதி ஊர்வலத்தில் பறை அடித்த காளி வெங்கட்!https://t.co/wupaoCQKa2 | #pooramu #kaalivenkat #parai #பூராமு #RIPPooRamu pic.twitter.com/Ksr7PoU2He
— ABP Nadu (@abpnadu) June 28, 2022
தமிழ் திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகராக முத்திரைப்பதித்து மிளிர்ந்தவர். உடல்நிலை குன்றிய அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி திங்களன்று நேற்று மாலை 6.30 மணியளவில் அவர் காலமானார்.
சென்னை ஊரப்பாக்கம் (டீக்கடை பேருந்து நிறுத்தம்) பெரியார் நகர் 15வது தெருவில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு தமிழ்நாடு பாடநூல் கலக தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் செல்வசிங், கே.கனகராஜ், கண்ணன், கே.சாமுவேல் ராஜ், மாவட்ட செயலாளகர்கள் பா.சு.பாரதி அண்ணா, வேல்முருகன், செல்வா, கட்டுபாட்டு குழு உறுப்பினர் இ.சங்கர், மாநில குழு உறுப்பினர் டில்லிபாபு, ரமேஷ்பாபு, ராஜசேகர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைபொதுச் செயலளர் சுவாமிநாதன், தமுஎகச நிர்வாகிகள் சைதை சே, இரா.தே.முத்து, மயிலை பாலு, எழுத்தாளர் பிரளயன், கவிஞர் நா.வே.அருள், திரைப்பட இயக்குநர்கள் சீனு ராமசாமி, லெனின், அனந்த கிருஷ்ணன், சசி, திரைப்பட கலைஞர்கள் காளி வெங்கட், பிளாக்பாண்டி, பிரகதீஸ்வரன் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊரப்பாக்கம் கிளை செயலாளர்கள் மணிவேல், ராமானுஜம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மாற்று ஊடக மைய கலைக்குழு , பேசு பறை கலைக்குழு, முகில் கலைக்குழு , சாரல் கலைக்குழு உள்ளிட்ட கலைக்குழுவை சார்ந்த கலைஞர்கள் பறை இசையுடன் அஞ்சலி செலுத்தினர். இறுதியாக ஊரப்பக்கம் மயானத்தில் நடைபெற்ற இறுதி நிகழ்வில் தோழர் ராமுவின் உடலுக்கு மூத்த மகள் மகாலட்சுமி கெள்ளியிட தகனம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
வணிகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion