Ponniyin Selvan: வெளியான த்ரிஷாவின் புகைப்படம்.. அப்டேட்டுகளை அடுக்கும் பொன்னியின் செல்வன்..!
'பொன்னியின் செல்வன் 'படத்தில் இருந்து நடிகை த்ரிஷாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
![Ponniyin Selvan: வெளியான த்ரிஷாவின் புகைப்படம்.. அப்டேட்டுகளை அடுக்கும் பொன்னியின் செல்வன்..! Ponniyin Selvan Trisha look revealed from Lyca production Ponniyin Selvan: வெளியான த்ரிஷாவின் புகைப்படம்.. அப்டேட்டுகளை அடுக்கும் பொன்னியின் செல்வன்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/07/4d0a80bf7c35dbced9bc34a4cc7f07a71657176297_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
'பொன்னியின் செல்வன் 'படத்தில் இருந்து நடிகை த்ரிஷாவின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
View this post on Instagram
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவருகிறது. முன்னதாக இப்படத்தின் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் கதாபாத்திரங்களின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் தற்போது த்ரிஷாவின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்தில் குந்தவையாக த்ரிஷா நடித்திருக்கும் நிலையில், விக்ரம் ஆதித்ய கரிகாலனாகவும், கார்த்திய வந்தியத் தேவனாகவும் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப்படம் தொடர்பான அப்டேட்கள் இந்த வாரம் முழுக்க வெளியாகும் என வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை சென்னை வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)