மேலும் அறிய

Ponniyin selvan: தொடர்ந்து லீக்காகும் பொன்னியின் செல்வன் புகைப்படங்கள் - கோபத்தில் மணிரத்னம்!

பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்ச்சியாக லீக் ஆவதால் படத்தின் இயக்குனர் மணிரத்தினம் மிகுந்த கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது இந்த படத்தில் ஜெயம் ரவி,  விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். 

இதில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார்.  ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு,  சமீபத்தில் நிறைவடைந்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி,  படப்பிடிப்பிற்காக மத்தியப் பிரதேசம் சென்றுள்ளனர். அங்கு நிறைய  கோயில்கள், அரண்மனைகள் நிறைந்த ஒர்ச்சா பகுதியில், பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பில் தற்போது கார்த்தி, த்ரிஷா சமந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. முக்கியான காட்சியான பாடல் ஒன்று படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது படப்பிடிப்பில் புகைப்படங்கள் சிலது சமூக வலைதளங்களில் வெளியானது.

இதனைக் கண்ட பொன்னியின் செல்வன் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இயக்குநர் மணிரத்னம், தொடர்ந்து படத்தின் புகைப்படங்கள் வெளியாகுவதால், அவர் கோபத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.  

மணிரத்னம் படப்பிடிப்பின் போது அதிக பாதுகாப்புடன் இருந்த போதிலும் தொடர்சியாக இந்த சம்பவம் நடைபெறுகிறது. மேலும் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்களான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் ஆகியோர் புகார் அளித்துள்ளனர். 

முன்னதாக பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது குதிரை ஒன்று பலியானது. அதனால் படத்தின் இயக்குநர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இது தொடர்பாக The Animal Welfare Board of India விரிவான விசாரணை மேற்கொள்ள இருக்கிறது. அதுமட்டுமின்றி த்ரிஷா, சிவன் கோயில்களில் செருப்பு காலுடன் நடந்த புகைப்படம் வெளியானது. அதனால் அவர் மீது, இயக்குநர் மணிரத்னம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

தலைப்பு செய்திகள்

Prasanth:
Prasanth:" டாக்டராக வேண்டிய நான் விதியால நடிகன் ஆகிட்டேன்.." மனம் திறந்த டாப் ஸ்டார் பிரசாந்த்
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!
பிரபு - விஜய் வர்மா கூட்டணியில் புதிய படம்.. யுவன் இசையில் ஃபிராங்க்ளின் ஜேக்கப் இயக்கம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!

Embed widget