PS-1 First Single: நீங்களும் வாங்க, சேர்ந்து வெளியிடுவோம்... பொன்னிநதி பாடல் வெளியீட்டுக்கு அழைப்பு விடுத்த கார்த்தி!
சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று மாலை 6 மணிக்கு பொன்னிநதி பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வாருங்கள் என்று வந்தியதேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்னதாக இப்படத்தின் டீசரை தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் கடந்த ஜூலை 8 ஆம் தேதி வெளியிட்டது. தமிழ்நாடு தாண்டி பிறமொழி ரசிகர்களிடையும் இந்த டீசர் பெரும் வரவேற்பைப் பெற்றது.
முதல் பாடல் ரிலீஸ்
ஜூலை மாதம் தொடங்கி பொன்னியின் செல்வன் பட அப்டேட்களை தொடர்ந்து வழங்கி படக்குழு மகிழ்வித்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் (இன்று) ஜூலை 31ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.
இதற்கான அறிவிப்பு போஸ்டரில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி இடம்பெற்றுள்ள நிலையில், வந்தியத்தேவனுடன் ஆடித் திருநாள் கொண்டாட்டம் என்றும், பாடலின் பெயர் ’பொன்னி நதி’ என்றும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் நாவம் ’புதுவெள்ளம்’ எனும் அத்தியாயத்துடன் ஆடிப்பெருக்கு நாளை மையமாகக் கொண்டு வந்தியத்தேவனுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இன்று மாலை 6 மணிக்கு பொன்னிநதி பாடல் வெளியீட்டு விழாவிற்கு அனைவரும் வாருங்கள் என்று வந்தியதேவனாக நடித்துள்ள நடிகர் கார்த்தி வீடியோ மூலம் அழைப்பு விடுத்துள்ளார். அந்த வீடியோவில், “ அனைவருக்கும் வணக்கம், நான் உங்க கார்த்தி பேசுறேன். லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திடைப்படத்தின் முதல் பாடல், ஏஆர் ரகுமான் குரலில் வெளியாக இருக்கிறது. இந்த பாடலை டிப்ஸ் மியூசிக் வெளியிடுறாங்க. மாலை 6 மணிக்கு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வெளியாகிறது. நீங்களும் வாங்க, சேர்ந்து வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
Join us to celebrate the launch of #PonniNadhi at 6pm tonight at Express Avenue Mall, Chennai! #PS1FirstSingle ⚔️🎶#ManiRatnam #ARRahman @karthi_offl @actor_jayamravi #Jayaram#PS1 #PonniyinSelvan @madrastalkies_ @LycaProductions @arrahman @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/GjeHffEyVn
— Lyca Productions (@LycaProductions) July 31, 2022
முக்கிய தகவல்கள் :
கடந்த ஜூலை 16 ஆம் தேதி தமிழர்களின் பொற்கால வரலாற்றை வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சொல்வது போல ஒரு வீடியோ வெளியானது. இதனையடுத்து சோழர் காலத்தைப் பற்றி பல தகவல்கள் அடங்கிய வீடியோவும், அருண்மொழிவர்மன் எப்படி ராஜராஜ சோழனாக மாறினார் என்பது தொடர்பான தகவல்கள் அடங்கிய வீடியோவும் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றன.
2 பாகங்களாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படம் டீசர் வெளியிட்டு விழாவும் அன்றைய தினம் பிரமாண்டமாக சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் மணிரத்னம் கிட்டதட்ட 40 ஆண்டுகளாக இந்நாவலை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறேன் என்றும், இதனை படமாக்க 3 தடவை முயன்றுள்ளேன் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்