Ponniyin Selvan Update: படப்பிடிப்பு முடிந்தது... ரிலீஸ் தேதி இதுதான்- பொன்னியின் செல்வன் அப்டேட்!
இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இனி போஸ்ட்-ப்ரொடக்ஷன் வேலைகளில் முழுவீச்சில் களமிறங்கப்போவதாகவும் படக்குழு அப்டேட் வெளியிட்டுள்ளது. இதனால், பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது. 'சம்மர் 2022’ என குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழ் புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். முன்னதாக, பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
PS1 coming soon! #PonniyinSelvan #PS1 #ManiRatnam @MadrasTalkies_ @LycaProductions pic.twitter.com/bGGhmfubOk
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) September 18, 2021
PS-1 coming soon! #PS1 #PonniyinSelvan #ManiRatnam@MadrasTalkies_ pic.twitter.com/ZX1CWOYXkc
— Lyca Productions (@LycaProductions) September 18, 2021
பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்து வருகிறார்.
The golden era comes to life! #PonniyinSelvan #PS1 #ManiRatnam @LycaProductions @MadrasTalkies_ pic.twitter.com/Nz637f0Py1
— A.R.Rahman #99Songs 😷 (@arrahman) July 19, 2021
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார். ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பாதிக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் தொடங்கியது. இதனையடுத்து ஹைதராபாத்தில் பிரமாண்டமாக செட் அமைத்து நடந்து வந்த படப்பிடிப்பு, சமீபத்தில் நிறைவடைந்தது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தை லைகா நிறுவனமும், மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
Also Read: அவ்வளவு பஞ்சமா? 'பட்டி டிங்கரிங்' செய்து உருவாக்கப்பட்ட தமிழ் சினிமா தலைப்புகள்!