மேலும் அறிய

Ponniyin Selvan 2 : பொன்னியின் செல்வன் 2: வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சிதான் பெஸ்ட்... சிலாகித்த சுஹாசினி மணிரத்னம்!

ஏற்கெனவே அகநக பாடல், வந்தியத்தேவன் - குந்தவை காதல் காட்சி ஆகியவற்றுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், சுஹாசினியின் இந்த பதில் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உங்களுக்குப் பிடித்த காதல் கதை என்ன என்ற கேள்விக்கு, அவரது மனைவியும் நடிகையுமான சுஹாசினி அளித்துள்ள பதில் பொன்னியின் செல்வன் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக உள்ள சூழலில், பொன்னியின் செல்வன் படம் குறித்த அப்டேட்கள் சென்ற ஆண்டைப் போல் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, இயக்குநர் மணிரத்னம் இயக்கி சென்ற ஆண்டு வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ 

இரண்டு பாகங்களாக இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று சென்ற ஆண்டு வெளியாகி 500 கோடிகள் வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது.

ஹிட் அடித்த முதல் பாகம்

சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின்  அனைத்துக் கதாபாத்திரங்களும்  ரசிகர்கள் மனங்களைக் கவர்ந்து பேசுபொருளாக மாறி சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன. 

ஐஸ்வர்யா ராய்,விக்ரம், கார்த்தி,  த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெஷ்மி, ஷோபிதா, சரத்குமார், பார்த்திபன், பிரபு என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே  இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரிடமும் ஏகோபித்த ஆதரவை இந்தப்படம் பெற்றது.

அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பொன்னி நதி பார்க்கணுமே, ராட்சஷ மாமனே, சோழா சோழா, தேவராளன் ஆட்டம், அலைக்கடல், சொல் என அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து சென்ற ஆண்டின் ஹிட் ஆல்பமாக பொன்னியின் செல்வன் உருவெடுத்தது. அதேபோல் படத்தின் பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்து  பாராட்டுகளைப் பெற்றது.

படையெடுக்கும் அப்டேட்கள் 

இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 சம்மர் ஸ்பெஷலாக இந்த ஆண்டு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இரண்டாம் பாகத்துக்கான காட்சிகளும் முதல்  பாகத்துடனேயே சேர்த்து படமாக்கப்பட்டுவிட்ட நிலையில்,  இந்தப் படத்தன் வெளியீட்டுக்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

அதன்படி வரும் ஏப்ரல் 28ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், பொன்னியின் செல்வன் 2 குறித்த பல சுவாரஸ்யத் தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டு சென்ற ஆண்டைப் போலவே லைக்ஸ் அள்ளி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக பொன்னியின் செல்வன் 2 குறித்து இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி பேசியுள்ளது பொன்னியின் செல்வன் ரசிகர்களை உற்சாகத்தில்  ஆழ்த்தியுள்ளது.

சிறந்த காதல் காட்சி!

முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சுஹாசினியிடம்  மணிரத்னம் இயக்கத்தில் உங்களுக்குப் பிடித்த காதல் காட்சி எது எனக் கேள்வி எழுப்பப்படும் நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் வந்தியத்தேவனுக்கும் குந்தைவைக்கும் இடையில் ஒரு காட்சி உள்ளது. அதுதான் மணிரத்னம் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்த காதல் காட்சி என சொல்லலாம், ரொம்ப நல்லா இருக்கும், அவர்கள் இரண்டு பேரும் சந்திக்கும் ஒரே காட்சி இது” என சுஹாசினி தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அகநக பாடல், வந்தியத்தேவன் - குந்தவை இடையிலான காதல் காட்சிகள் ஆகியவற்றுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ள நிலையில், சுஹாசினியின் இந்தக் கருத்து பொன்னியின் செல்வன் பட ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

நேற்று (மார்ச்.20) பொன்னியின் செல்வன் படத்தின் 'அகநக' பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODETVK Member Ganja Supply: TVK வின் சொர்ணாக்கா? கஞ்சா விபச்சாரம் அடிதடி! போதைக்கு அடிமையாகும் இளசுகள்?Thiruvarur: குழந்தைக்கு அரிய வகை நோய்! ஒரு ஊசி - ரூ.16 கோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் -  மத்திய அரசு எச்சரிக்கை
Syria War: போர் பதற்றம் - இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள், அந்த நாட்டிற்கு செல்ல வேண்டாம் - மத்திய அரசு எச்சரிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டில் கனமழை ஓவரா? இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை மையம் அறிக்கை
"திருமாவுக்கு பிரஷர்.. அவர் மனசு இங்கதான் இருக்கு" உடைத்து பேசிய தவெக தலைவர் விஜய்!
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: விஜய்யை ஐஸ் மழையில் நனைய வைத்த ஆதவ் அர்ஜூனா! விசிகவுக்கு டாடா?; டென்சனில் திருமா?
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
Aadhav Arjuna: ” 2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்படனும் “ விஜய் முன் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு
"பார்ப்பனியத்தை தூக்கி அடி" அறிவு பாடிய அந்த வரி.. கைத்தட்டி வரவேற்ற தவெக தலைவர் விஜய்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
நுழைவுத் தேர்வை திணிக்கும் யுஜிசி? பள்ளிக்கல்விக்கு பாதிப்பு? எழும் எதிர்ப்புகள்!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
மக்களே ரெடியா? படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்.. விரைவில் அசத்த வருகிறது!
Embed widget