Jayam Ravi: பொன்னியின் செல்வன் 2 ஆடியோ லான்ச்.... அரியணை ஏறிய அருள்மொழி வர்மன்!
பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்க அவர்களை ஊமைராணி காப்பாற்ற வரும் வகையில் முடிந்திருந்தது.
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸாக வருகை தந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று (மார்ச்.29) மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
எழுத்தாளர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’ விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகி சுமார் 500 கோடி வசூலைக் குவித்து மாபெரும் வெற்றிபெற்றது. வயது வித்தியாசமின்றி குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் திரையரங்குகளுக்கு சென்ற ஆண்டு இந்தப் படத்தைக் காண படையெடுத்தனர்.
தொடர்ந்து இந்த ஆண்டு சம்மர் ஸ்பெஷலாக இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் மாதம் தொடங்கி பட அப்டேட்கள் படையெடுக்கத் தொடங்கின. இந்நிலையில், இன்று இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்ற பாகத்தைப் போலவே பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை முதலே பொன்னியின் செல்வன் பட ஹாஷ்டேகுகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. மாலை தொடங்கி விழாவுக்கு படக்குழுவினர், கோலிவுட் ரசிகர்கள் என நேரு உள்விளையாட்டு அரங்கம் விழாக்கோலம் பூண்டது.
இந்நிலையில், விழாவுக்கு நடிகரும் ’பொன்னியின் செல்வன்’ மையக்கதாபாத்திரமான அருள்மொழி வர்மன் பாத்திரத்தில் நடித்துள்ளவருமான ஜெயம் ரவி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வருகை தந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
#PonniyinSelvan2 Audio & Trailer Launch - #JayamRavi Arrived..💥 Looking Dapper..👌#PS2 #PS2Trailer pic.twitter.com/IkiO8quRPi
— Laxmi Kanth (@iammoviebuff007) March 29, 2023
பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருள்மொழிவர்மனும் வந்தியத்தேவனும் கடலில் முழ்க அவர்களை ஊமைராணி காப்பாற்ற வரும் வகையில் முடிந்திருந்தது. இந்நிலையில், இந்த பாகம் அருள்மொழி வர்மன் காப்பாற்றப்படும் காட்சியுடன், நடிகர் ஜெயம் ரவியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியின் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன,
பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ponniyin Selvan 2: கமல் வருவதால் பொன்னியின் செல்வன் விழாவில் ரஜினி பங்கு பெறவில்லையா? உண்மையான காரணம் என்ன?